தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை: உற்சாகத்தில் ஊழியர்கள்!

சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் மீஷோ நிறுவனம் அதன் ஊழியர்களின் மனநலனை கருத்திற்கொண்டு 11 நாட்கள் தொடர் விடுமுறை அளித்திருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2022, 11:19 AM IST
  • தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை அளித்த மீஷோ.
  • பணியாளர்கள் நலன் கருதி நடவடிக்கை.
  • விடுமுறை கிடைத்த உற்சாகத்தில் பணியாளர்கள்.

Trending Photos

தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை: உற்சாகத்தில் ஊழியர்கள்!  title=

சமீப காலமாக மீஷோ சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கி வருகிறது, பட்ஜெட் விலைக்குள் சிறந்த பொருட்கள் இந்த தளத்தில் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் மீஷோவிலேயே ஷாப்பிங் செய்ய தொடங்கிவிடுகின்றனர்.  வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மீஷோ ஷாப்பிங் தளம் அடிக்கடி பல அதிரடி சலுகைகள், பரிசுகள், வினாடி வினா மூலம் பரிசுகள் வழங்குவது என பலவற்றை செய்து வருகிறது.  வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பல சலுகைகள் வழங்குவது மட்டுமின்றி இந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கும் சில நன்மைகளை வழங்கி வருகிறது.  தற்போது இந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ரீசெட் மற்றும் ரீசார்ஜ் செய்துகொள்ள அக்டோபர் மாத இறுதியில் தொடர்ந்து 11 நாட்கள் விடுமுறை அளித்து அதன் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!

meesho

மீஷோ நிறுவனம் இதுபோன்று தொடர் விடுமுறை அளிப்பது இரண்டாவது முறையாகும், இதுகுறித்து நிறுவனம் அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கையில், பண்டிகை கால பரபரப்பான வேலைப்பளுவிற்கு பிறகு ஊழியர்கள் அவர்களது மனநிலையை சரிசெய்து கொள்ள அவர்களுக்கு சில நாட்கள் ஓய்வளிக்கப்படுவதாக கூறியுள்ளது.  இந்த 11 நாள் விடுமுறையில் தீபாவளியும் வருவதால் ஊழியர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். விடுமுறையில் எந்த வேலையையும் வீட்டிலிருந்தபடி செய்ய மீஷோ கூறாதது, அதன் ஊழியர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  இதுகுறித்த அறிவிப்பை மீஷோ நிறுவனர் சஞ்சீவ் பர்ன்வால் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

இதுமட்டுமின்றி மீஷோ அதன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது.  புதிதாக குழந்தை பிறந்திருந்தால் பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் கணவருக்கும் சேர்த்து 30 வாரங்கள் நிறுவனம் விடுமுறை அளிக்கிறது.  மேலும் இந்நிறுவனம் பாலின மாறுபாட்டிற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் உடல்நலத்தை கருத்திற்கொண்டும் அவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கிறது.

மேலும் படிக்க | இனி பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News