Mars Retrograde: செவ்வாய் பெயர்ச்சியால் 2023ல் பணத்தில் படுத்து உருளப்போகும் ராசிகள்

Mangal Margi 2023: திசை மாறும் செவ்வாய் போகும் போக்கில்  3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துச் செல்வார்... 2023ல் பணத்தில் படுத்து உருளப்போகும் ராசிகள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 18, 2022, 06:02 PM IST
  • மங்களத்தை அள்ளித் தரும் செவ்வாய்ப் பெயர்ச்சி!
  • அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி
  • கன்னி ராசிக்கு இனி கவலையில்லை
Mars Retrograde: செவ்வாய் பெயர்ச்சியால் 2023ல் பணத்தில் படுத்து உருளப்போகும் ராசிகள் title=

2023 புத்தாண்டில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய், 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களைத் தருவார். செவ்வாயின் நேரடி சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றம், மகிழ்ச்சியான வாழ்க்கை, திருமணம் மற்றும் செல்வ வளத்தைத் தரும். ஜோதிடத்தின் படி, திருமணம், நிலம், தைரியம், துணிச்சல், சொத்து ஆகியவற்றுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் செவ்வாய் கிரகம் வலுத்து இருந்தால் பணப் பிரச்சனையே இருக்காது. ஜாதகத்தில் செவ்வாயின் நிலை திருமண வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிறது.

ஒருவைன் ஜாதகத்தில் செவ்வாய் அசுபமாக இருந்தால், அந்த நபர் ஆணவம், கோபம் கொண்டவராக மாறுகிறார். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படப் போகிறது. தற்போது ரிஷப ராசியில் செவ்வாய் எதிர்திசையில் அதாவது வக்ர கதியில் இருக்கிறார். ஜனவரி 13, 2023 முதல், செவ்வாய் தனது சஞ்சாரத்தை மாற்றுவது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனைத் தரும். 2023-ம் ஆண்டின் செவ்வாயால் அதிர்ஷ்டமடையும் ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் நல்ல பலன் தரக்கூடியது. நிதி ஆதாரங்களால் பலன்களைப் பெறலாம். சிக்கிய பணத்தைத் திரும்பப் பெறலாம். வருமானம் அதிகரிப்பதால், நிதி நிலைமை நிம்மதியைத் தரும். வாக்கு சுத்தமும், பேச்சுத் திறனும் மேம்படும். வாயால் தொழிலில் சிறக்கலாம். அதாவது, ஆசிரியர், மார்க்கெடிங், ஊடகம் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல காலம்.  

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நேரடி சஞ்சாரம் சுபமாக இருக்கும். தொழில் துறையில் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அவற்றை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.

மேலும் படிக்க | புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ 

கன்னி ராசி: செவ்வாயின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் தற்போது தொடங்கும். செயல்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு முக்கியமான திட்டத்தை முடிக்க முடியும். வெளியூர் பயணம் அல்லது நீண்ட பயணம் செல்லலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பொங்கலை புத்துணர்ச்சியுடன் வரவேற்க அருள் புரியும் புதாதித்ய யோகம்! 3 ராசிக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News