உங்கள் முகம் தங்கம் போலே மின்ன மாதுளை சீரத்தை ட்ரை பண்ணி பாருங்க..!

உங்கள் முகம் தங்கம் போல மின்ன மாதுளை பழ சீரத்தை வீட்டிலேயே செய்து பாருங்கள். இது, உங்களது சருமத்தை பாதுகாக்க உதவும். 

Written by - Yuvashree | Last Updated : May 26, 2023, 05:13 PM IST
  • மாதுளை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
  • மாதுளை பழத்தை எந்த வகையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
  • மாதுளை சீரத்தை வீட்டிலேயே பயன்படுத்தலாம்.
உங்கள் முகம் தங்கம் போலே மின்ன மாதுளை சீரத்தை ட்ரை பண்ணி பாருங்க..! title=

உங்கள் முகம் தங்கம் போல மின்ன, நாமும் பலபல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால் ஒன்றும் பலனலிக்காமல் பாேய் இருக்கும். இனி முகத்தை பொலிவாக்குவது குறித்து கவலை வேண்டாம். இந்த மாதுளை சீரத்தை பயன்படுத்தி பாருங்கள். 

மாதுளை சீரம்:

இந்த மாதுளை பழ சீரத்தை நாம் எல்லோரும் வீட்டிலயே தயார் செய்யமுடியம்.  மாதுளை நம் அனைவருக்கும் பிடித்த பழம். இந்த மாதுளை சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கப்பது  மட்டுமின்றி ரத்தையும் சுத்தம் செய்கிறது.  

இந்த மாதுளை பழ சீரம் உறுப்புகளை குளிரூட்டவதை தாண்டி நம் சருமத்திற்கும் பொலிவுட்டுகிறது. மாதுளை ஃப்ளேவரில் சமீப காலமாக ஃபேசியல்  சீரம் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மாதுளை சீரம செய்ய தேவையான பொருட்கள்:
மாதுளை பழம் 2, மாதுளை பூக்கள் 10, பாதாம் எண்ணெய் 25 மில்லி, ஆலிவ் எண்ணெய்  50 மில்லி, தேங்காய் எண்ணெய் 100 மில்லி.

மேலும் படிக்க | 2022-23 நிதியாண்டில் 8 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி!

செய்முறை:

முதலில் நீரில் கழுவி சுத்தம் செய்து தோளோடு சேர்த்து நறுக்கி கொள்ள வேண்டும்.
பின் மாதுளை பழத்தையும்  மாதுளை பூவையும் நீர் இன்றி 
மிஸ்சிஸில் அராய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்து கடையில் லேசா மிதமாக  கொதிக்கவைக்க வேண்டும். 
சற்று கொதித்த பின்னர் அரைத்து வைத்திருக்கும் மாதுளை பழ மற்றும் பூ கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும். 
அதை சேர்த்த பின் மெதுவாக கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். 
இந்த மாதுளை பழ கலவை வெந்து பொரிஞ்சு பழுப்பு நிறத்திற்கு மாறி பழம்  தனியாக   எண்ணெய்  தனியாக   வந்துவிடும். அடுத்து ஒரு  இரவு முழக்க ஆர வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எண்ணெய்யா தனியாக ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள் இது தான் சீரம். 

பயன்படுத்தும் முறை:

இந்த சீரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சீரத்தை இங்க் பில்லர் வழியாக நான்கு  சொட்டு பயன்படுத்தினால் போதுமானது. இந்த சீரத்தை  முகத்தில் தடவி 5 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டு.  உங்களுக்கு வறட்சியான சர்மமாக இருந்தால்  3 மணி நேரம் கழித்து 
கழுவ வேண்டும் இல்லையெனில் 10 நிமிடத்தில் கழுவ வேண்டும்.  சீரத்தை  காலை மாலை இரண்டு நேரமும் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தினால் 
சருமம் விரைவில் பளபளப்பு தன்மையை  அடைந்து விடும். சருமத்திற்கு மாதுளை பழ   சீரத்தை  பயன்படுத்துவதால்  முகம் சுருக்கம் இல்லாமல் நம் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

மாதுளையினால் ஏற்படும் நன்மைகள்:

மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம், ஜூஸாக குடிக்கலாம் இவை பிடிக்கவில்லையா? தயிர் சாதத்தில் மாதுளையை கலந்து சாப்பிடலாம். மாதுளை சாப்பிடுவதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அது மட்டுமா? மாதுளையில் இன்னும் என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியமா? 

மாதுளையின் விதைகள் நம் தோலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் சரிசெய்யும். மாதுளம்பழச்சாறு நமது தலைமுடியின் வேர்களை  உறுதிப்படுத்தும். தலையில் உள்ள ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சிக்கு உதவி செய்யும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப்  பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றும். 

தினமும் மாதுளை சாப்பிட்டு வந்தால், மூளையில் உள்ள நரம்பு சக்திகள் இயற்கையாகவே செயல்பட தொடங்குகின்றன. இது,  மூளையைச் சுறுசுறுப்பாக்கும். அதுமட்டுமன்றி,  ஞாபகசக்தியையும் அதிகரிக்கும். அத்துடன் மூளை சம்பந்தப்பட்ட நோயான அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

மேலும் படிக்க | Tirumala Tirupati: திருப்பதியில் விஐபி மற்றும் பொது பக்தர்களுக்காக தரிசனத்தில் புதிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News