இந்தியாவில் அதிவேக ரயில்கள் என்று பார்க்கும் போது , வந்தே பாரத் ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் அல்லது சதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயர்கள் நமது நினைவில் வரும். இந்தியாவில் ஓடும் அதிவேக ரயில்களின் வேகம் மணிக்கு 130 முதல் 180 கி.மீ ஆகும். ஆனால் உலகின் சில நாடுகளில் மின்னல் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும் போது, அவற்றை தெளிவாக பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு அதன் வேகம் இருக்கும் இந்த ரயில்களின் வேகம் இருக்கும். சில நொடிகளில் கண்களில் இருந்து மறைந்துவிடும்.
அதி-அதிவேக இரயில்கள்
அதி-அதிவேக இரயில்கள் 'Maglev' என்பது மேக்னடிக் லெவிடேஷன் (magnetic levitation) என்பதன் சுருக்கம். இது சக்திவாய்ந்த காந்தப்புலங்களால் இயக்கப்படும்கிறது. அசாதாரண வேகத்தில் ரயில்களை இயக்க உதவுகிறது. உராய்வு அடிப்படையிலான சக்கரங்களை நம்பியிருக்கும் பாரம்பரிய ரயில்களைப் போலன்றி, மேக்லெவ் ரயில்கள் தடங்களுக்கு மேலே மிதந்து, உராய்வை நீக்குகின்றன. சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவில் மட்டுமே இது போன்ற ரயில்கள் சேவையில் உள்ளன.
உலகின் அதிவேக ரயில்
ஜப்பானில் ஓடும் எஸ்சி மாக்லெவ் ரயில் தான் உலகிலேயே அதிவேக ரயில். இந்த ரயிலின் வேகம் மணிக்கு 603 கிலோமீட்டர். Maglev ரயில்களின் தொழில்நுட்பம் மற்ற ரயில்களில் இருந்து வேறுபட்டது. இந்த அதிவேக ரயில் மேக்னடிக் லெவிடேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இரண்டாவது அதிவேக ரயில்
உலகின் இரண்டாவது அதிவேக ரயிலும் ஜப்பானில் இயக்கப்படுகிறது. JR Maglev MLX-01 ரயிலின் வேகம் மணிக்கு 581 கி.மீ. தற்போது இந்த ரயிலின் பாதை ஒரு சில இடங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என ஜப்பான் அரசு கூறியுள்ளது.
மூன்றாவது அதிவேக ரயில்
உலகின் மூன்றாவது அதிவேக ரயிலின் பெயர் டிஜிவி ரயில். பிரான்சின் அல்ஸ்டோம் நிறுவனம் இந்த அதிவேக ரயிலை தயாரித்துள்ளது. இந்த ரயிலின் வேகம் மணிக்கு 575 கிலோமீட்டர். படிப்படியாக, அதிவேக ரயில்களின் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், புதிய வழித்தடங்களிலும் இதுபோன்ற ரயில்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேலும் படிக்க | 44 நடைமேடைகள்... 67 ரயில்தடங்கள்... உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்!
உலகின் அதிவேக ரயில்கள்
சமீபத்தில், சீனா ரயில்வே CR 450 அதிவேக ரயிலை சோதனை செய்தது. இந்த ரயிலின் வேகம் மணிக்கு 400-450 கிலோமீட்டர் வரை இருக்கும். இந்த ரயில் உலகின் அதிவேக ரயில் என்று சீனா கூறுகிறது. சீனா ரயில்வேயின் இது குறித்து கூறுகையில், கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் அதிவேகமான, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த அதிவேக ரயிலை வெற்றிகரமாக சோதித்துள்ளனர் என்றும், ஃபுகிங்கில் இருந்து கியான்சூ வரை மணிக்கு 450 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது என்றும் கூறினர். சீனாவின் இந்த அதிவேக ரயில் பயண நேரத்தை பாதியாக குறைக்கும் என கூறப்படுகிறது.
டெல்லியிலிருந்து மும்பைக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம்
இந்தியாவில் சீனாவில் ரயில் இயக்க வைக்கப் பட்டால், டெல்லியில் இருந்து மும்பைக்கு இந்த ரயிலில் செல்ல 3 மணி நேரம் மட்டுமே ஆகும் என்பதிலிருந்து இந்த ரயிலின் வேகம் நீங்கள் மனதில் கணக்கிட்டுக் கொள்ளலாம். சீனா அதிவேகமாக முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, குறைந்த வெற்றிட பைப்லைனில் அதிவேக மாக்லேவ் ரயில் அல்லது சோதனை ஓட்டத்தை சீனா நடத்தியது. மாக்லேவ் ரயில் ஜப்பானில் ஓடுகிறது.
மேலும் படிக்க | இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை... ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ