சென்னை: சென்னை தீவுத் திடலில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை வரை) "மதராச பட்டினம் விருந்து" என அழைக்கப்படும் தமிழக பாரம்பரிய உணவுத் திருவிழாவை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவருடம் துணை முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இருந்தனர்.
இந்த "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழா சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. "வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம்" என்ற பெயரில் நடக்கும் மூன்று நாள் உணவுத் திருவிழாவில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க உணவுகள் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தமிழக முதல்வர், "மதராச பட்டினம் விருந்து" உணவுத் திருவிழாவில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க சிறப்பு உணவுகளும் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
கம்பு, கேழ்வரகு என சிறுதானிய உணவுகளே பெரும்பாலான மக்களின் உணவாக இருந்தது. தற்போது இத்தகைய பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் தான் நோய்களுக்கு காரணம். எவ்வளவு செல்வம் இருந்தாலும் சர்க்கரை நோய் வந்துவிட்டால் ருசியான உணவை வேடிக்கை தான் பார்க்க முடியும். சாப்பிட முடியாது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னோர்கள் கூறிய உணவு வகைகளை பின்பற்ற தொடங்கினால் உடல் ஆரோக்கியத்துடன் சுகமாக வாழலாம். பாராம்பரிய உணவுகளை அன்றாடம் உண்போம் என உறுதியேற்போம் எனக் கூறினார்.