LPG Cylinder Price: அக்டோபர் மாதத்திற்கான LPG சிலிண்டரின் விலை என்ன?

அக்டோபருக்கு வெளியிடப்பட்ட LPG சிலிண்டர்களின் புதிய கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள்... 

Last Updated : Oct 1, 2020, 09:56 AM IST
LPG Cylinder Price: அக்டோபர் மாதத்திற்கான LPG சிலிண்டரின் விலை என்ன? title=

அக்டோபருக்கு வெளியிடப்பட்ட LPG சிலிண்டர்களின் புதிய கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள்... 

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அக்டோபர் மாதத்திற்கான சமையல் எரிவாயு (LPG Gas Cylinder) விலையை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களை தொடர்ந்து மூன்றாவது மாதமாக LPG கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாதத்தில், எண்ணெய் நிறுவனங்கள் (HPCL, BPCL, IOC) LPG விலையை நிலையானதாக வைத்திருக்கின்றன. டெல்லியில் 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது. மற்ற நகரங்களிலும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், வணிக சிலிண்டர்களின் விலை ரூ.32 அதிகரித்துள்ளது.

இந்தியா முக்கிய பெருநகரங்களில் 14.2 கிலோ LPG சிலிண்டர் விலை

  • டெல்லியில் 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது.
  • மும்பையில் மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .594 ஆகும்.
  • சென்னையில் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.610.
  • கொல்கத்தாவில் எல்பிஜி சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ .620.50 ஆக நிலையானது.

ALSO READ | COVID-19 தடுப்பூசியை உருவாக்க 5,00,000 சுறாக்கள் கொல்லப்படலாம்.. ஏன் தெரியுமா? 

19 கிலோ LPG சிலிண்டர் விலை உயர்ந்தது

- நாட்டின் தலைநகரான டெல்லியில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .1,133.50-லிருந்து ரூ.1,166 ஆக உயர்ந்துள்ளது. 19 கிலோகிராம் எல்பிஜி சிலிண்டர் ரூ .32 அதிகரித்துள்ளது. 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.594.

- கொல்கத்தாவில், 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,196 லிருந்து ரூ.1,220 ஆக உயர்ந்துள்ளது. இங்கே விலை சிலிண்டருக்கு ரூ .24 அதிகரித்துள்ளது.

- மும்பையில், 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,089 லிருந்து ரூ.1,113.50 ஆக உயர்ந்துள்ளது. இங்குள்ள விலை சிலிண்டருக்கு ரூ .4.50 அதிகரித்துள்ளது.

- சென்னையில் 19 கிலோ எல்பிஜி எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,250 லிருந்து ரூ .1,276 ஆக உயர்ந்துள்ளது. இங்கே விலை சிலிண்டருக்கு ரூ .26 அதிகரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தளத்தை சரிபார்க்கவும்

இது தவிர, மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் (https://www.iocl.com/Products/IndaneGas.aspx) சரிபார்க்கலாம். அனைத்து நகரங்களின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை இங்கே பெறுவீர்கள்.

Trending News