LPG சிலிண்டர்களின் விலை குறைந்தது: புதிய விலை விவரம் இதோ

LPG Price: எண்ணெய் நிறுவனங்கள் இன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளன. மறுபுறம் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2022, 12:23 PM IST
  • வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் மலிவானது.
  • பணவீக்கத்திற்கு மத்தியில் விலை 9 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
  • வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 50 பாய் உயர்த்தப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர்களின் விலை குறைந்தது: புதிய விலை விவரம் இதோ title=

புதுடெல்லி: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளன. 

எனினும், இதற்கிடையில், பொதுமக்களும் ஒரு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்களின் புதிய விலையை அறிந்து கொள்ளுங்கள்

எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களில் 9 ரூபாய் குறைத்துள்ளன. இதன் பிறகு டெல்லியில் வணிக சிலிண்டர்களின் விலை 1 மார்ச் 2022 அன்று நிர்ணயிக்கப்பட்ட ரூ. 2012 இல் இருந்து குறைந்து ரூ 2003 ஆகியுள்ளது. 

அதே சமயம் கொல்கத்தாவில் ரூ.2095 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.8 குறைந்து ரூ.2087 ஆக உள்ளது. மும்பையிலும் இதன் விலை சுமார் ரூ.9 குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரின் இதன் விலை ரூ.1954.50 ஆக குறைந்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.2137.50க்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | மக்கள் வேதனை; 137 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பிப்ரவரி மாத விலையைப் பார்த்தால், டெல்லியில் பிப்ரவரி 1, 2022 அன்று, அதன் விலை ரூ. 1907 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 1987 ஆகவும், மும்பையில் ரூ. 1857 ஆகவும் சென்னையில் ரூ. 2040 ஆகவும் இருந்தது. 

வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் புதிய விலை

இன்று, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. மார்ச் 22, 2022 முதல், டெல்லியில் 14 கிலோ சிலிண்டர் ரூ.949.5 ஆக உள்ளது. முன்னதாக இது ரூ.899.50 ஆக இருந்தது. இது தவிர, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வுடன், 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்களின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இப்போது 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் ரூ.349க்கும், 10 கிலோ சிலிண்டர் ரூ.669க்கும் கிடைக்கும்.

மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News