LPG Gas சிலிண்டரின் விலை உயர்ந்தது: நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை இதுதான்

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் LPG எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. முன்னதாக ஜூலை மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2020, 04:05 PM IST
  • மானியமற்ற LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது.
  • IOC டிசம்பர் மாதத்திற்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை வெளியிட்டுள்ளது.
  • ஐந்து மாதங்களுக்குப் பிறகு மானியமற்ற LPG சிலிண்டர்களின் விலை அதிகரிக்கிறது.
LPG Gas சிலிண்டரின் விலை உயர்ந்தது: நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை இதுதான் title=

புதுடெல்லி: மானியமில்லாத LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. IOC டிசம்பர் மாதத்திற்கான கேஸ் சிலிண்டர்களின் விலையை வெளியிட்டுள்ளது. மானியமற்ற LPG சிலிண்டர்களின் விலை நாடு முழுவதும் ரூ .50 அதிகரித்துள்ளது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மானியமற்ற LPG சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உங்கள் நகரத்தின் புதிய LPG கட்டணங்கள் இதோ:

IOC வலைத்தளத்தின்படி, இந்த அதிகரிப்புக்கு பிறகு, டிசம்பரில் சென்னையில் (Chennai) மானியமற்ற LPG சிலிண்டரின் விலை ரூ .610 லிருந்து ரூ .660 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் 14.2 கிலோ மானியமற்ற LPG சிலிண்டரின் (LPG Cylinder) விலை ரூ .644 ஆனது. இது முன்பு ரூ .594 ஆக இருந்தது. கொல்கத்தாவிலும் அதன் விலை 670.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முன்பு 620.50 ரூபாயாக இருந்தது. மும்பையில், மானியமற்ற LPG சிலிண்டரின் விலை ரூ .594 லிருந்து ரூ .644 ஆக உயர்ந்துள்ளது.

வணிக சிலிண்டர்களுக்கான விலையும் 56 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ: LPG Gas Booking Subsidy : வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் Cashback அறிவிப்பு!

மானியமற்ற LPG சிலிண்டரின் டிசம்பர் மாத விலை நிலவரம்

14.2 கிலோ சிலிண்டர்

 நகரம் பழைய விலை புதிய விலை
சென்னை 610 660
டெல்லி 594 644
மும்பை 594 644
கொல்கத்தா 620.5 670.5

வணிக சிலிண்டரின் விலை 56 ரூபாய் உயர்ந்துள்ளது

19 கிலோ எல்பிஜி சிலிண்டர்

நகரம் விலை
சென்னை 1410.50
டெல்லி 1296
மும்பை 1244
கொல்கத்தா 1351

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் LPG எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. முன்னதாக ஜூலை மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றின. இந்த ஆண்டு செப்டம்பரில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வீட்டு LPG எரிவாயு சிலிண்டர்களின் மானியத்தை கூட அரசாங்கம் வழங்கவில்லை. இதன் மூலம் அரசாங்கம் நேரடியாக 20 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: LPG Gas Cylinder முன்பதிவு இப்படி செய்தால்.. உங்களுக்கு கேஷ்பேக் அல்லது தள்ளுபடி கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News