புதுடெல்லி: விசுவாசத்திற்கு அடையாளம் என்று பெயர் பெற்றிருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த 100 வயது முதியவர். இவர், 84 ஆண்டுகள் ஒரே ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி உலக சாதனை படைத்துள்ளார். ‘போராடும் குணம்’ இருந்ததால்தான் இத்தனை நாள் இந்தப் பயணத்தில் நடக்க முடிந்தது என்கிறார் அர்ப்பணிப்புள்ள ஊழியர்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற முதுமொழியை உண்மையாக்கியிருக்கிறார் இந்த 100 வயது முதியவர். 84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கின்னஸ் சாதனையும் படைத்த பெருமைமிகு பணியாளர்...
84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர், இதை வெறும் விசுவாசம் என்று சிறிய வட்டத்தில் அடைத்துவிட முடியுமா?
பிரேசிலில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைக்க முடிந்ததற்கு தனது வேலையின் மீதான ஆர்வம்தான் காரணம் என்று 100 வயது முதியவர் வால்டர் வொர்த்மேன் (Walter Orthmann) கூறுகிறார். நிறுவனத்தில் அதிக காலம் பணியாற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு
இவரது இந்த சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்பதும் இவரது சாதனை தான். தோன்றின் புகழோடு தோன்றுக என்ற திருக்குறளுக்கு பொருத்தமான நிதர்சன உதாரணம் வால்டர் வொர்த்மேன்.
தனது வேலை அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் வால்டர், தனது தாயாருக்கு பதிலாக 16 வயதில் வேலையில் சேர்ந்தார். அன்று தொடங்கி, 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தார் வால்டர் ஓர்த்மேன்.
கடந்த மாதம் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நீண்ட காலம் அதுவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் இவர்தானா என்ற சாதனை சரிபார்க்கப்பட்டு ஜனவரி 6ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.
வறுமையான குடும்பத்தில் பிறந்த வால்டர் ஒர்த்மேன் 15 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தபோது (Employment) ஜெர்மன் மொழி தெரிந்திருந்த ஒரே காரணத்தால், அவர் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
வேலையில் கெட்டியாக இருந்த இளைஞர் வொர்த்மேன், அதை 84 ஆண்டுகள் தக்க வைத்துக் கொண்டு சாதனை படைத்துள்ளார். நீண்ட மற்றும் திருப்திகரமான தொழில் வாழ்க்கையை எதிர்பார்க்கும் எவருக்கும் விசுவாசம் ஒன்றே அடிப்படை என்றாலும், விரும்புவதைச் செய்யுங்கள் ஜங்க் உணவுகளிலிருந்து விலகி இருங்கள் என்பதே அறிவுரையாக இருக்கிறது.
ஆர்த்மேன் சமீபத்தில் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தனது வேலையைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? 'நான் வேலை செய்ய விரும்புகிறேன். போராட்ட மனப்பான்மையோடு, உத்வேகத்தோடு வேலை செய்ய ஆரம்பித்தேன். உழைக்கிறேன் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் அது நீண்டகாலத்துக்கு பலனளிக்காது. வேலை செய்வதில் விருப்பம் இருந்தால் மட்டுமே அது மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாக இருக்கும்'.
100 வயது வரை வேலை செய்யும் ஆர்த்மேன் பல தசாப்தங்களுக்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கலாம் அல்லவா? ஏன் தள்ளாத வயதிலும் வேலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? , ஆனால் வேலையில் இருந்த அர்ப்பணிப்பும், விருப்பமுமே தொடர்ந்து பணிக்கு செல்ல தூண்டியதாக அவர் சொல்கிறார்.
காலத்துக்கு ஏற்றாற் போல மாற்றிக் கொள்வது அவசியம்
பணியில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் வந்தால், அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதும் இந்த 84 வருடம் பணியாற்றிய அனுபவசாலியின் அறிவுரை ஆகும். டெக்னாலஜியில் மாற்றம் வந்தாலும், காலத்துக்கு ஏற்றாற்போல் மாறி, வியாபார உலகில் வரும் நுணுக்கங்களுக்கு ஏற்றாற்போல் கற்றுக்கொண்டதால் தான் தன்னால் ஒரே நிறுவனத்தில் அதுவும் ஓய்வு பெற்ற பிறகும் பணியாற்றும் தகுதியை கொடுத்ததாக அவர் நம்புகிறார்.
ஏப்ரல் 19ம் தேதியன்று 100 வயதான வால்டர் வொர்த்மேன், தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கொண்டாடினார். உப்பு மற்றும் சர்க்கரையை தவிர்க்கிறேன். அதேபோல, குடலைப் புண்படுத்தும் விஷயங்களை நான் தவிர்க்கிறேன். கோக் மற்றும் பிற சோடாக்களையும் சாப்பிடுவதில்லை. உடலுக்கு நல்லதை மட்டுமே நான் உட்கொள்கிறேன். இது உண்மையில் உங்கள் உடலை எப்போதும் வலிமையாக வைத்திருக்க உதவுகிறது என்று தனது ஆரோக்கியத்திற்கான காரணத்தையும் இந்த 100 வயது தாத்தா பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் படிக்க | ஆன்லைனில் மருந்து வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR