பர்சனல் லோன், நகை கடனை விடுங்க... பரஸ்பர நிதியம் மீது குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்!

Mutual Fund Loan: பல கடன் வழங்குநர்கள் பரஸ்பர நிதிகளுக்கு எதிராக கடன்களை வழங்குகிறார்கள். இந்தக் கடனில், தனிநபர் கடன் மற்றும் தங்கக் கடனை விட குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2023, 01:10 PM IST
  • பரஸ்பர நிதியங்கள் மீதான கடன் தனிநபர் மற்றும் தங்கக் கடன்களை விட வட்டி குறைவு.
  • ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் பெறலாம்.
  • சந்தை வீழ்ச்சியின் போது வாடிக்கையாளர் டாப்-அப் செலுத்த வேண்டியிருக்கும்.
பர்சனல் லோன், நகை கடனை விடுங்க... பரஸ்பர நிதியம் மீது குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்! title=

பொதுவாக அவசர தேவைக்கான கடன் என்றால், நம் மனதில் முதலில் உதிப்பது, தனி நபர் கடன் என்னும் பர்சனல் லோன் அல்லது நகைக் கடன் தான். இந்நிலையில், அவசர தேவைக்கு பரஸ்பர நிதியத்தின் மீது கடன் வாங்கலாம். இதன் மீதான் அவட்டி குறைவு என்பது கூடுதல் சிறப்பு. மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதிய திட்டங்கள் பலரின் முதலீட்டுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, பல கடன் வழங்குநர்கள் அதற்கு எதிராக கடன்களை வழங்குகிறார்கள்.

பரஸ்பர நிதியத்தின் மீதான கடனை பொறுத்தவரை, ஒருபுறம், கடன் வழங்குபவர்கள் அத்தகைய கடன்களை அணுகும் செயல்முறையை எளிதாக்கியுள்ளனர். அதே நேரத்தில், தனிநபர் அல்லது தங்கக் கடனுடன் ஒப்பிடும்போது அதன் வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளது. இந்த கடனை பொது மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து பெறலாம். ஆனால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) இந்த வகை கடன்களை அதிகம் கொடுக்கின்றன. இந்த கடனின் மிகப்பெரிய ஈர்ப்பு என்னவென்றால், சிறிய தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் இலாபகரமான முதலீட்டு திட்டங்களை நிறுத்த வேண்டியதில்லை.

திட்ட மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், திட்ட மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் பெறலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து NBFCகள் இந்தக் கடனுக்கு 9-10% வட்டி வசூலிக்கின்றன. ஒப்பிடுகையில், தங்கத்தின் மீதான கடன் 9-24% வரை இருக்கும், அதே சமயம் மக்கள் தனிநபர் கடனுக்கு 10-18% செலுத்துகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு எதிரான பெரும்பாலான கடன்களின் தவணைக்காலம் 12 மாதங்கள் மற்றும் குறைந்தபட்ச கடன் தொகை  ₹10,000 மற்றும் அதிகபட்சமாக  ₹1 கோடி வரை கடன் பெறலாம்.

நிதி பலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்

பல சமயங்களில் குறுகிய கால அவசரநிலைகளை சந்திக்க முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் ஈக்விட்டியிலிருந்து நியாயமான வருவாயைப் பெறுவதில்லை மற்றும் அவர்களின் நீண்ட கால இலக்குகளை இழக்கிறார்கள். இதனை தவிர்க்க, நிதி தேவைகளுக்காக பரஸ்பர நிதிய பங்குகளை விற்காமல் அதன் மீது குறைந்த வட்டியில் கடனை பெறலாம். இதனால், பரஸ்பர நிதியத்தின் மூலம் கிடைக்கும் நிதி பலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

மேலும் படிக்க | Old is Gold: தாமரை பொரித்த ‘20’ பைசா காயின் இருக்கா.. ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்..!

எளிதான செயல்முறை

கடனளிப்பவர்கள் பரஸ்பர நிதிகளுக்கு எதிராக மக்கள் கடன் வாங்குவதை எளிதாக்கியுள்ளனர். அவர்கள் முழு செயல்முறையையும் டிஜிட்டல் முறையாக வைத்து எளிதாக்கியுள்ளனர். NBFC நிர்வாகிகள் கூறுகையில், பொதுவாக, அந்த தொகை பயன்படுத்தப்படும் நாட்களுக்கு, பயன்படுத்தப்படும் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும் மற்றும் EMI இல்லை. ஒரு வருட கடன் காலத்தின் போது எப்போது வேண்டுமானாலும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாம் மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு கடனைப் புதுப்பிக்க விருப்பம் உள்ளது. நிதித் திட்டமிடுபவர்கள், மருத்துவ அவசரம் போன்ற தேவைகளை இந்த வகை கடனை பெறலாம் என்று கருதுகின்றனர்.

கடனில் உள்ள சிக்கல்

எனினும், இத்தகைய கடன்களின் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டால் கடன் வாங்குபவர் டாப்-அப் செய்ய வேண்டும். அதாவது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளதோ, அவ்வளவு பணத்தை ஈடு கட்டும் படி கடன் வழங்குபவர் கடனாளியைக் கேட்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

முதலீட்டாளர்கள் இதுபோன்ற கடன்களை வாங்க அறிவுறுத்தும்போது, ​​அத்தகைய அறிவுரைகளுக்குப் பின்னால் ஏதேனும் சுயநலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்து மேலாண்மை நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்கள் தங்கள் சொத்துக்கள் வீழ்ச்சியடைவதை விரும்ப மாட்டார்கள், ஏனெனில் அவர்களின் வருமானம் குறையும்.

மேலும் படிக்க | சொத்துகள் மீது கடன் வேண்டுமா? எஸ்பிஐ-ல் எளிதாக பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News