LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை

LIC IPO: ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பிப்ரவரி 28, 2022 வரை, 6.48 கோடி பாலிசிதாரர்கள் தங்கள் பான் எண்ணை பாலிசியுடன் இணைத்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2022, 11:55 AM IST
  • எல்ஐசி ஐபிஓ: விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஐபிஓ மூலம் 3.5 சதவீத பங்குகளை விற்க முடிவு.
  • இதன் பிட் லாட் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை title=

எல்ஐசி ஐபிஓ: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) முதலீட்டாளர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. வரும் மே 4ம் தேதி எல்ஐசி-ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ) சந்தாவிற்காக திறக்கப்படுகிறது. இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட காப்பீட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

ஐபிஓ வருவதற்கு முன்பே, இது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எல்ஐசியின் ஐபிஓ அறிவிப்புக்குப் பிறகு, 6.48 பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதிலிருந்தே இதை தெரிந்துகொள்ள முடிகிறது. 

ஒரு பங்கின் விலை ரூ 902-949

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (டிஐபிஏஎம்) இயக்குநர் ராகுல் ஜெயின் கூறுகையில், “ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பிப்ரவரி 28, 2022 வரை, 6.48 கோடி பாலிசிதாரர்கள் தங்கள் பான் எண்ணை பாலிசியுடன் இணைத்துள்ளனர். ரூ.21,000 கோடி மதிப்பிலான ஐபிஓவுக்கு ஒரு பங்கின் விலை ரூ.902-949 என எல்ஐசி நிர்ணயித்துள்ளது.” என்றார்.

பாலிசிதாரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு

ஐபிஓவில் பாலிசிதாரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஜெயின் கூறுகையில், “பாலிசிதாரர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பாலிசி விவரங்களில் தங்கள் பான் விவரங்களைச் சேர்த்திருந்தால், அவர்கள் ஒதுக்கீட்டு பிரிவின் மூலம் எல்ஐசி ஐபிஓவில் பங்கேற்கலாம். அனைத்து பாலிசிதாரர்களும் ஒதுக்கீட்டு வகை மற்றும் சில்லறை விற்பனை வகையிலும் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்று டிஐபிஏஎம் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | LIC IPO மே 4 ஆம் தேதி வெளியீடு தொடங்குகிறது: ஒரு பங்கின் விலை இதுதான் 

எல்ஐசி ஐபிஓ: ஒரு பார்வை

- இதன் விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- எல்ஐசியின் மதிப்பு ரூ. 6 லட்சம் கோடியாகும்.

- எல்ஐசியின் ஐபிஓ அளவு ரூ.21 ஆயிரம் கோடியாக இருக்கும்.

- 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது.

- எல்ஐசியின் ஐபிஓ மே 4ஆம் தேதி தொடங்கி மே 9ஆம் தேதி நிறைவடைகிறது.

- ஐபிஓ மே 17 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஐபிஓ மூலம் 3.5 சதவீத பங்குகளை விற்க முடிவு.

- 22.13 கோடிக்கு பங்கு விற்பனை செய்யப்படும்.

- ஆங்கர் முதலீட்டாளர்களுக்காக மே 2 ஆம் தேதி ஐபிஓ திறக்கப்படும்.

- இதன் பிட் லாட் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும்.

- எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News