சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!

Suriya Jyothika Relationship Lesson : நடிகர் சூர்யாவும் ஜாேதிகாவும் 2006ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிடமிருந்து இப்போதைய காதலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காதல் பாடங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 8, 2024, 05:03 PM IST
  • சூர்யா ஜோதிகாவின் 19 ஆண்டு காதல்
  • இன்றைய ஜோடிகள் கற்றுக்கொள்ள வேண்டியது
  • ரிலேஷன்ஷிப் டிப்ஸ்
சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!  title=

Suriya Jyothika Relationship Lesson : கோலிவுட் திரையுலகில் பலரது ஃபேவரட் ஜோடிகளாக இருப்பவர்கள், சூர்யா-ஜோதிகா. மிக இளம் வயதிலேயே காதலில் விழுந்த இவர்கள், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளை பெற்ற பின்பும் அதைவிட அதிகமான அன்புடனும் காதலுடனும் வலம் வருகின்றனர். இவர்களிடமிருந்து தற்போதைய காதலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் குறித்து பார்ப்போம். 

1.கனவு முக்கியம்:

சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்தித்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதலில் ஜோடியாக நடித்தனர். சில ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் காதல் முளைத்திருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் இருவருமே தங்களது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தனர். இதனால், தங்களுக்குள் இருந்த காதலை முதன்மை படுத்தாமல், தங்களது கனவை முதன்மை படுத்தினர். காக்க காக்க படத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து பின்னர் இல்வாழ்க்கையில் இணைந்தனர். எனவே, நீங்கள் இளம் வயதிலேயே காதலிப்பவராக இருந்தால் முதலில் உங்கள் கனவை முதன்மைப்படுத்துங்கள். உங்களுக்கானது உங்கள் கையில் கண்டிப்பாக வந்து சேரும். 

2.பரஸ்பர மரியாதை:

காதல் இருக்கும் இடத்தில் கனிவும் மரியாதையும் இருக்கும் என்று கூறுவார்கள். அதற்கேற்றார் போல சூர்யாவும் ஜோதிக்காவும் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவிற்கு காதல் வைத்திருக்கிறார்களோ அதைவிட பன்மடங்கு அதிகமாக மரியாதை வைத்திருக்கின்றார்கள். ஜோதிகா, திருமணம் முடிந்த உடன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது அதற்கு உறுதுணையாக நின்றார் சூர்யா. அதேபோல, திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரை உலகிற்கு என்ட்ரி கொடுக்க வேண்டும் இன்று ஜோதிகா முடிவெடுத்தபோதும் அதற்கும் துணையாக நின்றார் சூர்யா. அதேபோல, சூர்யா சினிமாவை தாண்டி செய்யும் நல்ல விஷயங்களுக்கும் அவர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார் ஜோதிகா. 

Suriya Jyothika

3.காதலுக்காக எடுக்கும் முயற்சிகள்: 

காதல் உறவில் இருக்கும் போது காதலர்கள் இருவருமே தங்களின் உறவை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். இதை சூர்யா ஜோதிகா இருவருமே பாலோ செய்கின்றனர். தனது மனைவிக்காக சூர்யா எடுக்கும் முயற்சிகளும், அவருடன் மேலும் செலவிடுவதற்காக அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. எனவே, புதிய காதலர்கள் உங்கள் காதலை தக்க வைத்துக் கொள்ள அதற்கான முயற்சிகளை இப்போதே எடுங்கள். 

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

4. வெற்றியை சேர்ந்து கொண்டாடுதல்:

பண்டிகைகளை மட்டுமல்ல தங்களது வாழ்வில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் வெற்றிகளையும் இருவரும் சேர்ந்து கொண்டாடுவது சூர்யா ஜோதிகாவின் வழக்கம். இருவரும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் வெற்றியை ஒரு சேர வெற்றியாக பார்த்து ஒருவரைப் பற்றி ஒருவர் எங்கு சென்றாலும் புகழ்ந்து வருகின்றனர். உங்கள்  பாட்னர் உங்களைவிட ஏதேனும் ஒரு விஷயத்தில் உயர்ந்தவராக இருந்தால் அவரைக் கொண்டாட வேண்டுமே ஒழிய, சிறுமைப்படுத்துதல் கூடாது. 

5.விட்டுக்கொடுக்காமை:

அனைத்து சினிமா செலிப்ரிட்டிகளையும் போல, சூர்யா-ஜோதிகாயவை சுற்றி அவ்வப்போது தேவையற்ற வீண் வதந்திகள் பரவும். ஆனால், அது போன்ற சமயங்களில், இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் தங்களின் கரங்களை கெட்டியாக பிடித்திருக்கின்றனர். எங்கு சென்றாலும் “என் புருஷன் என்ன நல்லா பாத்துக்குறாரு..” என்று ஜோ சொல்வதும், “My பொண்டாட்டி..” என சூர்யா சொல்வதும் காண்பவர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும். எனவே, உங்களுக்கானவரை, எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருங்கள். 

6.கண்ணியம் தவறாமை:

சினிமாவில் இருப்பவர்களை சுற்றி எப்போதுமே ஒரு பிம்பம் இருக்கிறது. அவர்களில் பலர் தங்களில் பார்ட்னர்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்பதுதான் அது. ஆனால், சூர்யா-ஜோதிகா விஷயத்தில் இருவரும் இதில் சொக்க தங்கங்களாக இருக்கின்றனர். சூர்யாவிற்கு ஒரு முறை ஒரு படத்தில் நாயகியுடன் உதட்டுடன் உதடு வைத்து நடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், அதற்கு அவர் கிரீன் மேட் உபயோகித்து நடித்தாராம். சினிமாவிற்குள் மீண்டும் வந்த ஜோதிகாவும் எந்த ஹீரோவுடனும் நெருங்கி நடிக்காமல் இருக்கிறார். இது போன்ற கண்ணியத்தை விட, வேறு என்ன வேண்டும் காதலில்? 

மேலும் படிக்க | ஒன் சைட் லவ்வை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ஈசியான காதல் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News