Late Marriage Pros And Cons : திருமணம் என்பது, நெடுங்காலமாக வரும் உறவு என பலர் கூற கேள்விப்பட்டிருக்கும். ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணவன் என்ன அடித்தாலும் துவைத்தாலும், குடித்துவிட்டு ரகளை செய்தாலும், அண்டை வீட்டு பெண்டிரை நோக்கினாலும், இரண்டாம் திருமணமே செய்து கொண்டாலும் கூட, நம் ஊர் பெண்கள் “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என டைலாக் பேசிக்கொண்டு காலத்தை கழித்து வந்தனர். ஆனால், இப்போது இருக்கும் பெண்கள் அவ்வளவு ஏமாளியாக இல்லை. அனைவருக்கும், தனக்கு திருமணத்தில் என்ன வேண்டும்? என்ன வேண்டாம்? என்று தெள்ளத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர். “திருமணம் என்பது, நமது விருப்பம், கட்டாயம் அல்ல” என்பதையும் பலர் புரிந்து கொண்டு வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கிறது. இருப்பினும், இந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் இளம் வயதில் இல்வாழ்க்கையில் இணைகின்றனர். பலர், 26 என்பது திருமணம் செய்து கொள்வதற்கு சரியான வயது என்று கூறுகின்றனர். ஒரு சிலர், 30 வயதை தாண்டி திருமணம் செய்து கொண்டால் அதை காலதாமதமாக செய்து கொள்ளும் திருமணம் என கூறுகின்றனர். அதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த திருமண வயது வேறுபாடு அதிகமாக இருக்கிறது. 26 வயது நிறைந்த ஆணின் மீது இருக்கும் திருமணத்திற்கான அழுத்தம், அதே வயதில் இருக்கும் பெண் மீது 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. தங்கள் விருப்பமாகவோ அல்லது விருப்பம் இல்லாமலோ காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
காலதாமதமாக திருமணம் செய்து கொள்வதில் இருக்கும் நன்மைகள்:
>தாமதமாக திருமணம் செய்து கொள்வது, நம்மை பற்றி நாமே அதிகமாக புரிந்து கொள்ள நமக்கு நேரம் கொடுக்கிறது. இதனால் நாம் உணர்வு ரீதியாகவும் மனரீதியாகவும் நன்றாக வளர்ந்து தயரான பின்பு திருமணத்திற்கு தயாராகிறோம்.
>தொழில் ரீதியாக, நாம் ஒரு நல்ல நிலையில் இருக்க கால தாமதமான திருமணங்கள் உதவுகிறது. இது, நாம் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவும் உதவுகிறது.
>காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது, அதிகமான வாழ்க்கையை பற்றிய புரிதல்களை அளிக்கிறது. இதனால், அந்த திருமண உறவும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது.
>காதலிப்பவர்கள் கூட, தாமதமாக தங்கள் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்கின்றனர். இது, அவர்களின் உறவு இன்னும் வலுபட உதவுகிறது.
>தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள், தங்களை பற்றி நன்றாக புரிந்து வைத்துக்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கான துணையை அவர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் பெருகின்றனர்.
>திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தை உருவாக்கும் ஒரு நல்ல நிலையை, காலதாமதமான திருமணம் உருவாக்கி கொடுக்கிறது.
>காலதாமதமான திருமணங்கள், விவாகரத்தில் பெரும்பாலும் முடிவதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
>காலதாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள், ஒருவருக்கொருவர் காலம் வரை உண்மையாக இருக்கின்றனராம்.
தீமைகள் என்னென்ன?
>காலதாமதமாக திருமணம் செய்து கொள்பவர்களால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
>காலதாமதமாக திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பலருடனான பாலியல் உறவு இருந்திருக்கலாம். இது, ஹெச்.ஐ.வி நோய்க்கு வழி வகுக்குமாம்.
>காலதாமதமாக திருமணம் செய்து கொள்பவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் அதிக அளவு வயது வித்தியாசம் இருக்கும். இது, அவர்கள் வாழ்வில் குழந்தை வளர வளர பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
மேலும் படிக்க | Arranged Marriage-ல் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ