Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!!

ஒரு நபர் இறந்தால், அவருடைய ஆதார் எண் என்ன ஆகும், அது தொடார்பாக அரசாங்கம் என்ன  நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 12:19 PM IST
  • ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் என்னவாகும்?
  • நாடாளுமன்றத்தில், அரசு அளித்த முக்கிய தகவல்கள்.
  • இறப்புச் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை.
Aadhaar: ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன..!!! title=

Aadhaar Latest News: ஆதார் அட்டை நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. இது இல்லை என்றால், நமது பல பணிகள்  நிறைவேற்ற முடியாமல் நின்று விடும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, அரசு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது அல்லது கொரோனா தடுப்பூசி பெறுவது எதுவாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் ஆதார் தேவை. வீடு வாங்குவது முதல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவது வரை பெரும்பாலான வங்கி செயல்பாடுகள் என அனைத்திற்கும் ஆதார் அவசியம்.

நபர் இறந்த பிறகு ஆதார் என்னவாகும் என்ற இந்தக் கேள்விக்கான பதிலை மக்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்துள்ளார். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய ஆதார் செயலிழக்கச் செய்யப்படாது என தெரிவித்தார்.

தற்போது இறந்தவரின் ஆதார் எண்ணை ரத்து செய்ய எந்த முறையும் பின்பற்றப்படவில்லை என்று சந்திரசேகர் கூறினார். இருப்பினும், அவர் மக்களவையில், UIDAI -யின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 -ன் வரைவு திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளைக் கோரியுள்ளார்.  இறப்பு சான்றிதழ் வழங்கும் போது ஆதாரை பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாக திருத்தங்கள் செய்ய கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ALSO READ | Amazon Great Freedom Festival 2021: அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளலாம்

இறப்பு சான்றிதழுடன் ஆதார் இணைத்தல்

தற்போது, ​​பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பிறப்பு மற்றும் இறப்பு புள்ளிவிவரங்கள் தொடர்பான தரவுகளை பாதுகாத்து வைக்கும் நபராக உள்ளது. இறந்த நபர்களின் ஆதார் எண்ணை, டீஆக்டிவேட் செய்வதற்கான, அதாவது செயலிழக்கச் செய்வதற்கான எந்த வழிமுறையும் தற்போது இல்லை. ஆனால் பதிவாளர் மற்றும் UIDAI இடையில் ஆதார் எண்ணைப் பகிர்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன், பதிவாளர் அதை டீஅக்டிவேட் செய்ய இறந்தவரின் ஆதார் எண்ணை UIDAI உடன் பகிரத் தொடங்கலாம். ஆதாரை செயலிழக்கச் செய்வது அல்லது அதன் இறப்புச் சான்றிதழுடன் இணைப்பது ஆதார் உரிமையாளர் இறந்த பிறகு, அவரது எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

கடந்த மாதம், UIDAI உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, உங்களது வீட்டில் தபால்காரர் மூலம் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் தொலைபேசி எண்களை புதுப்பிக்க தபால்காரர்களை அனுமதிக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் UIDAI ஏற்பாடுகளை செய்துள்ளது.

ALSO READ | Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை நொடியில் இணைக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News