புதுடெல்லி: அனைத்து புதிய ஆதார் அட்டைகளும் இப்போது பாலிவினைல் குளோரைடு (PVC) கார்டுகளின் இந்த சிறிய பதிப்பில் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெரும்பாலான உத்தியோகபூர்வ வேலைகளை முடிக்க, ஆதார் அட்டை (Aadhaar Card) தேவைப்படுகிறது. பொதுவாக எல்லா நேரங்களிலும் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை கருதப்படுகிறது.
ஆதார் அட்டையை எளிதாக அனைவரும் எடுத்து செல்வதற்கு வசதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மிகத் தேவையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை அதார் அட்டை மிகவும் சிறியதாக உள்ளது. அனைத்து புதிய ஆதார் அட்டைகளும் இப்போது பாலிவினைல் குளோரைடு (PVC) கார்டுகளின் இந்த சிறிய பதிப்பில் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
ALSO READ | ஆதார் அப்டேட்கான புதிய சேவை தொடக்கம்
இதனையடுத்து, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குப் பதிலாக எந்த மொபைல் எண்ணிலும் OTP ஐப் பெறுவதன் மூலம் அங்கீகார செயல்முறையைச் செய்ய அட்டைதாரர்களை UIDAI அனுமதித்துள்ளது.
இந்தத் தகவலை UIDAI கடந்த வாரம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. "உங்கள் #ஆதாருடன் (Aadhaar Card) பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைத் தவிர, #OTPஐப் பெறுவதற்கு எந்த மொபைல் எண்ணையும் நீங்கள் பயன்படுத்தலாம். எனவே, ஒருவர் முழு குடும்பத்திற்கும் ஆதார் PVC கார்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்" என்று UIDAI ட்வீட் செய்துள்ளது.
#OrderAadhaarPVC
You can use any mobile number to receive #OTP for #authentication, regardless of the registered mobile number with your #Aadhaar. So, one person can order Aadhaar PVC cards online for the whole family.
Follow the link https://t.co/G06YuJBrp1 to order now. pic.twitter.com/uwELWteYOT— Aadhaar (@UIDAI) January 27, 2022
பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் பிவிசி கார்டை ஆர்டர் செய்வதற்கான படிப்படியான செயல்முறை
www.uidai.gov.in அல்லது www.resident.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
‘ஆதார் கார்டு ஆர்டர்’ சேவையைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் 12 இலக்க ஆதார் அட்டை (UID) எண் / 16 இலக்க மெய்நிகர் அடையாள (VID) எண்/ 28 இலக்க ஆதார் பதிவு எண்ணைச் செருகவும்.
'TOTP' விருப்பத்துடன் நேர அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல் அல்லது 'OTP' விருப்பத்துடன் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுவதன் மூலம் பாதுகாப்பு சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.
ALSO READ | ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்
‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஒப்புக்கொள்ளவும்.
TOTP அல்லது OTP ஐச் சமர்ப்பிக்கவும்
உங்கள் ஆதார் விவரங்களை மதிப்பாய்வு செய்து அச்சிடுவதற்கான ஆர்டரை உறுதிப்படுத்தவும்
கிரெடிட், டெபிட் கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.50 (ஜிஎஸ்டி மற்றும் அஞ்சல் கட்டணங்கள் உட்பட) செலுத்தவும்.
திரையில் டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீது மற்றும் SMS இல் சேவை கோரிக்கை எண்ணைப் பெறவும்.
ஆதார் பிவிசி ஆர்டர் (Aadhaar PVC) ரசீதை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
ALSO READ | Aadhaar Card: மக்களுக்கு நல்ல செய்தி அளித்தது UIDAI, இனி பணிகள் இன்னும் சுலபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR