வரலட்சுமி நோன்பு (Varalakshmi Nombu) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, பல விஷயங்கள் கிடைத்தன. பாற்கடலில் இருந்து தோன்றிய அன்னை மகாலட்சுமி, மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள்.
மகாலட்சுமியை பாற்கடலில் வசிக்கும் மகா விஷ்ணு தனது நெஞ்சில் சூடிக்கொண்டார். அதனால்தான் பெருமாளிடம் வற்றாத செல்வம் குறைவில்லாது இருக்கிறது. மகாலட்சுமியை முறையாக வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம்.
அன்னை உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம். வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய வெள்ளிக் கிழமை அன்று, ஸ்ரீவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையை, வரலட்சுமி பூஜைக்குரிய நாளாகக் கொள்ளவேண்டும்.
Also Read | வரலட்சுமி விரதத்தின் வரலாறும், தாத்பர்யமும் தெரியுமா?
இந்த ஆண்டு 20-08-2021ஆம் தேதியன்று வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது
பஞ்சாங்கத்தின் படி வரலக்ஷ்மி விரத நேரங்கள்.....
சிம்ம லக்ன பூஜை முகூர்த்தம் (காலை) - காலை 06:18 முதல் 08:19 வரை
காலம் - 02 மணி 01 நிமிடம்
விருச்சிக லக்ன பூஜைமுகூர்த்தம் (பிற்பகல்) - 12:44 PM முதல் 03:00 PM வரை
காலம் - 02 மணி 16 நிமிடங்கள்
கும்ப லக்ன பூஜை முகூர்த்தம் (மாலை) - 06:52 PM முதல் 08:25 PM வரை
காலம் - 01 மணி 33 நிமிடங்கள்
விருஷப லக்ன பூஜை முகூர்த்தம் (நள்ளிரவு) - 11:36 PM முதல் 01:34 AM, ஆகஸ்ட் 21 வரை
காலம் - 01 மணி 58 நிமிடங்கள்
Also Read | திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. அன்னை லட்சுமியை இந்த நன்நாளில் நினைத்து, பூஜித்து விரதம் வைத்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து செல்வங்களையும் தந்தருவார் அன்னை.
தூய்மையின் பிறப்பிடமான அன்னை, சுத்தமும் சுகாதாரமும் நிறைந்திருக்கும் இடத்தில் குடிகொள்வாள். எனவே, நமது இல்லத்தையும், நம் அகத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு அன்னையை வழிபடவேண்டும்.
சிலர் வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் அன்னை மகாலட்சுமியின் திருவுருவத்தை வரைந்து வழிபடுவார்கள், சிலர். கலசத்தில் அன்னையின் திருமுகத்தைத் தீட்டி, அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள்.
கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைத்து, 'அம்மா மகாலட்சுமி தாயே! எங்கள் வீட்டுக்கு வாம்மா! எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வாதம் செய்யம்மா!’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் துவக்குங்கள். அன்னையை வழிபடும் போது, அன்னையின் மனதில் குடிகொண்டிருக்கும் நாராயணனையும் சேர்த்து பூஜிக்கலாம்.
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவலோக மங்கை சித்ரநேமி வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
வரலட்சுமி நோன்பை எடுக்கும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். அன்னைக்கு படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்து, தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
சம்பிரதாயப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
Read Also | வரலட்சுமி விரதம் 2020: சகல ஐஸ்வர்யங்களை பெற்று தரும்....
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR