இளைஞர்கள் பலரது பரவலான காலை உணவாக இருக்கும் Kellogg-s Corn Flakes, சுயஇன்பம் பழக்கத்தை கைவிட உருவாக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி, கூகிள் தேடுபொறியில் "Kellogg-s Corn Flakes எதற்காக பயன்படுத்தப்படுகிறது?" என தேடினால், ‘Kellogg-s Corn Flakes ஆனது சுய இன்பன் பழக்கத்தை கட்டுப்படுத்த உண்டாக்க பட்ட காலை உணவு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக பார்க்கையில்., "1894-ல் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கால் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது Kellogg-s Corn Flakes. இது டிஸ்பெப்சியாவைக் குறைக்கும் என்றும், ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப, சுயஇன்பம் மற்றும் அதிகப்படியான உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் குறைக்கும் என அவர் நம்பினார். கெல்லாக் சகோதரர்கள் கிரானோஸ் என்று அழைக்கப்பட்ட மக்காச்சோள தானிய செதில்களாக நோயாளிகளிடையே மிகவும் பிரபலமான உணவாக இருந்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை கொண்டு சமூக ஊடகங்களில் Kellogg-s Corn Flakes பற்றி பல வேடிக்கையான பதிவுகள் உலா வருகின்றன. இந்த பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு.
So that’s what #cornflakes were invented for. pic.twitter.com/3ztxSyv5ko
— George (@king26914) August 16, 2019
damned bakae bo I wake up ka a bowl of #cornflakes pic.twitter.com/y2O1QQgREV
— Lerato1love (@lerato1love) August 16, 2019