பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேர்வு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 13, 2022, 02:43 PM IST
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு
  • தேர்வு எதுவும் கிடையாது
  • அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
 பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

பாபா அணு ஆராய்ச்சி மையமானது Pharmacists, Nurse பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Pharmacists பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் மற்றும் Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப் பணியிட விவரம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Pharmacists, Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,

Pharmacists – 4 பணியிடங்கள்

Nurse – பல்வேறு பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Pharmacists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ

Nurse பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Nursing & Midwifery (3 years Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

Pharmacists – ரூ.16,720

Nurse – ரூ. 24,234

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | EPFO News: PF UAN எண் மறந்துவிட்டதா? வீட்டில் இருந்தபடியே இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள், https://www.barc.gov.in/careers/vacancy28.pdf மற்றும் barc.gov.in/careers/vacancy27.pdf விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.10.2022 மற்றும் 19.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; வருவாய்த் துறையில் வேலை வாய்ப்பு

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News