ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு - 6000க்கும் அதிகமான பணியிடங்கள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 17, 2022, 04:10 PM IST
  • தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு
  • 6000க்கும் அதிகமான பணியிடங்கள்
  • நவம்பர் 11ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்3
ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு - 6000க்கும் அதிகமான பணியிடங்கள் title=

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 6000க்கும் அதிகம் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான  புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப் பணியிடங்கள்:

கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்

விருதுநகர் – 164 பணியிடங்கள்

புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்

நாமக்கல் – 200 பணியிடங்கள்

செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்

ஈரோடு – 243 பணியிடங்கள்

திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்

ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்

திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்

அரியலூர் – 75 பணியிடங்கள்

தென்காசி – 83 பணியிடங்கள்

திருநெல்வேலி – 98 பணியிடங்கள்

சேலம் – 276 பணியிடங்கள்

கரூர் – 90 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்

சிவகங்கை – 103 பணியிடங்கள்

தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்

ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்

பெரம்பலூர் – 58 பணியிடங்கள்

கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்

திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்

மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்

திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்

திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்

நீலகிரி – 76 பணியிடங்கள்

சென்னை – 344 பணியிடங்கள்

தருமபுரி – 98 பணியிடங்கள்

நாகப்பட்டினம் – 98 பணியிடங்கள்

திருவள்ளூர் – 237 பணியிடங்கள்

தூத்துக்குடி – 141 பணியிடங்கள்

கடலூர் – 245 பணியிடங்கள்

திண்டுக்கல் – 312 பணியிடங்கள்

காஞ்சிபுரம் – 274 பணியிடங்கள்

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:

மேல்நிலை வகுப்பு (12ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத,படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தத் தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தகவலை அளித்தார் மத்திய அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News