ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 25, 2022, 01:14 PM IST
  • ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு
  • பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • அடுத்த மாடம் 7ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்
ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

Project Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,500 முதல் ரூ.50,000வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Project Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேலும் படிக்க | Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா... அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.27,500 முதல் ரூ.50,000வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

Project Officer பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி கடைசி நாளாகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News