டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் வேலை - முழு விவரம்

CSB வங்கியில் வேலை வாய்ப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 13, 2022, 12:49 PM IST
  • சிஎஸ்பி வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது
  • ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள்
டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் வேலை - முழு விவரம் title=

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் எனப்படும் CSB Bank வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager – TASC பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. 

காலிப் பணியிட விவரம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) நிறுவனத்தில் Relationship Manager – TASC பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தேவையான திறன்:

விண்ணப்பதாரர்கள் Sales & Marketing Skills, Communication, Achievement Orientation மற்றும் Strategy Planning ஆகியவற்றில் நன்கு திறன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க | Post Office Scheme: தினசரி ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை பெறலாம்!

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://careers-csb.peoplestrong.com/job/detail/MFT6693 என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.08.2022ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சம்பளம் - மத்திய அரசு வேலை ரெடி

மேலும் படிக்க | 8th Pay Commission: அடுத்த ஊதியக்கமிஷன் வருமா, வராதா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News