ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.749 விலையில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்டு திட்டமானது 90 நாட்களுக்கு அன்லிமிடெட் பலன்களை தருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு தினமும் 2ஜிபி வரையில் டேட்டா வழங்கப்படுகிறது, இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 180 ஜிபி வரை வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா பயன்பாடு முடிந்ததும் வாடிக்கையாளர்கள் 64Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு இலவச அன்லிமிடெட் அழைப்புகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | இதை செய்யாவிட்டால் பான் கார்டு அம்போ... உடனே கவனிங்க!
இதுதவிர ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் இந்த திட்டம் உங்களுக்கு வழங்குகிறது, மேலும் 90 நாள் வேலிடிட்டியுடன் வரும் முதல் ஜியோ திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தை நீங்கள் ஜியோ இணையதளம் அல்லது மை ஜியோ செயலியிலும் பெற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக ஜியோ ரூ.719 விலையில் இது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்களை வழங்குவதுடன், ரூ.749 திட்டத்தில் கிடைக்கும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் இது உங்களுக்கு வழங்குகிறது.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.749 திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இருப்பினும் இதன் விலை சற்று அதிகம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச விங்க் மியூசிக் , இலவச ஹெலோட்யூன்ஸ், ஃபாஸ்டேக் ரீசார்ஜில் ரூ. 100 கேஷ்பேக் போன்ற பல வசதிகள் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ