5ஜியை விடுங்க! ஜியோ வழங்கும் 4ஜி அதிரடி ஆபர்! நெட்பிளிக்ஸ் இலவசம்!

ஜியோ நிறுவனம் முறையே ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499 ஆகிய விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகைகளுடன் திட்டங்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 19, 2022, 08:59 AM IST
  • ஜியோ 5ஜி சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 5ஜியை விட 4ஜி சேவைக்கு அதிக சலுகை வழங்கி உள்ளது.
  • நெட்பிளிக்ஸ் மற்றும் இதர பல சலுகைகள் வழங்குகிறது.
5ஜியை விடுங்க! ஜியோ வழங்கும் 4ஜி அதிரடி ஆபர்! நெட்பிளிக்ஸ் இலவசம்! title=

மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி  சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, கூடிய விரைவில் அடுத்த ஆண்டிற்குள் ஜியோவின் 5ஜி சேவைகள் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  5ஜி நெட்வொர்க்கை பெற வாடிக்கையாளர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது அதிரடியாக 4ஜி பயனர்களுக்கு பல அசத்தலான திட்டங்களை வழங்க முடிவு செய்து, கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்துள்ளது.  ஜியோ வழங்கும் இந்த 4ஜி திட்டங்களை பார்க்கும்போது 5ஜி வேண்டுமென்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடம் எழுவதற்கு வாய்ப்பில்லை.  

தற்போது ஜியோ அறிவித்துள்ள திட்டங்களின்படி, 4ஜி பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், இலவச நெட்பிளிக்ஸ் உடன் கூடிய டேட்டாவை வழங்குகிறது மற்றும் இலவச அமேசான் பிரைம் வீடியோ சந்தாக்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்கள் என பல ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.  சமீபத்தில் ஜியோ அதன் 12 ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாக்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது, இப்போது ஜியோ வழங்கும் சலுகைகளை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

ஜியோவின் ரூ.399 திட்டம் : 

இந்த 4ஜி போஸ்ட்பெய்ட் திட்டம் மொத்தம் 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சந்தாக்களை வழங்குகிறது.

ஜியோவின் ரூ 599 திட்டம் : 

இந்தத் திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் மற்றும் 100ஜிபி டேட்டா வழங்குகிறது.  கூடுதல் ஜியோ சிம்முடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சந்தாக்களை வழங்குகிறது.  

ஜியோவின் ரூ.799 திட்டம் : 

150ஜிபி டேட்டா பெனிபிட் கேப் உடன் இந்தத் திட்டம் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வழங்குகிறது.  ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்க்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.999 திட்டம் : 

இந்தத் திட்டமானது 200ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, அதன்பிறகு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்க்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ஜியோ ரூ 1,499 திட்டம் : 

ஜியோ வழங்கும் மிகவும் விலையுயர்ந்த போஸ்ட்பெய்ட் திட்டம் இதுவாகும், இதில் 300 ஜிபி டேட்டா,மற்றும்  500ஜிபி டேட்டா ரோல்ஓவர் வழங்கப்படுகிறது.  இது சில நகரங்களில் சர்வதேச அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  மேலும்  நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்க்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

மேலும் படிக்க | தீபாவளி ஷாப்பிங் செய்யணுமா? இந்த தளங்களில் அதிரடி தள்ளுபடிகள் உள்ளன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News