மரணத்திற்கு பிறகு வாழ்வு உண்டு என பல கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை உள்ளது என்று நம்புகின்றனர். இந்து மதத்தை பொறுத்தவரை, ஒருவர் இறந்த பிறகு, ஆன்மா மற்றொரு உடலில் நுழையும் என நம்பப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்திய ஆய்வாளர் ஒருவர் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது "அறிவியல் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது" என்று தெரிவிக்கிறார்.
மேலும் படிக்க | அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடமும்... ஒற்றை நாணயமும்..! மர்ம பின்னணி
டாக்டர். சீன் கரோல் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அண்டவியல் நிபுணர் மற்றும் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்பியல் விதிகளைப் படிப்பதற்காக அர்ப்பணித்துள்ளார். அவர் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் மற்றும் பிரபஞ்ச விதிகளை அடிப்படையாக வைத்து மரணத்துக்கு பிறகான வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார். அதில் பிரபஞ்சத்தின் விதிகள் இறந்த பிறகு மறுபிறவிக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை பிரபஞ்ச விதி அனுமதிக்கவில்லை என கூறுகிறார்.
மேலும் படிக்க | CIA எய்ட்ஸ் நோயை பரப்பியதா? தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சொன்னது என்ன?
தினசரி வாழ்க்கை இயற்பியல் விதிகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்படுகிறது என கூறும் டாக்டர். கரோல், உங்கள் மூளையில் சேமிக்கப்பட்ட தகவல்கள் இறந்த பிறகும் சேமிக்கப்பட வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இயற்பியல் விதிகளுக்கு முரணானது மறுபிறவி எனும் அவர், அணுக்கள் மற்றும் அறியப்பட்ட சக்திகளை தவிர வேறு எந்த சக்திகளும் இல்லை என தெரிவிக்கிறார். மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இயற்பியல் விதிகளை படித்தால் தெளிவு பெறலாம் என்றும் கரோல் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR