மாலத்தீவுகளின் அழிவு நெருங்கி விட்டதா... அதிர்ச்சித் தகவல்..!!!

மாலத்தீவுகள் அழிந்தால், அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில், City of Hope என்ற நகரம் தயாராகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 09:04 PM IST
  • மாலத்தீவுகள் அழிந்தால், அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில், City of Hope என்ற நகரம் தயாராகி வருகிறது.
  • உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடு மாலத்தீவுகள்.
  • அதன் பொருளாதாரம் சுற்றுலாவையே முக்கியமாக நம்பியுள்ளது. அதன் கடற்கரைகள் மிகவும் அழகானவை.
மாலத்தீவுகளின் அழிவு நெருங்கி விட்டதா... அதிர்ச்சித் தகவல்..!!! title=

இந்தியாவின் மிக அழகான அண்டை நாடான மாலத்தீவுகள் சுருங்கிக் கொண்டே வருகிறது.  உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடு மாலத்தீவுகள். அதன் பொருளாதாரம் சுற்றுலாவையே முக்கியமாக நம்பியுள்ளது. அதன் கடற்கரைகள் மிகவும் அழகானவை.

ஆனால் இப்போது இந்த நாடு வேகமாக சுருங்கி கொண்டே வருகிறது. இந்த நாட்டின் 1200 தீவுகள், விரைவில் கடல் நீரில் மூகி விடும் அபாயம் உள்ளது. 

அரேபிய கடலில் இந்தியாவின் அழகான அண்டை நாடான மாலத்தீவுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை, கடல் சில ஆண்டுகளில், கடல் விழுங்ககி விடும் என்று நம்பப்படுகிறது. 

 

இந்த நாடு  கடலில் கரைந்து சுருங்கும் ஆபத்து தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அதன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளில் கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 

மாலத்தீவுகள் ஆடம்பரமான அழகிய கடற்கரைகளக் கொண்டுள்ளது.  அதன் அழகு உண்மையிலேயே அனைவரையும் கவரும் வகையில் அற்புதமானதாக இருக்கிறது.

மாலத்தீவுகள் உலக வங்கிக்கு அளித்த அறிக்கையில், நீரில் மூழ்கும் அதிக ஆபத்து உள்ள நாடுகளில்  அந்நாடு இருப்பதால், அதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்த தீவிரமாக யோசிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது, மாலத்தீவு தீவுகள் மிகவும் பலவீனமாக உள்ளன. முன்னதாக 2008 ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் முகமது நஷீன் நாடு கடலில் மூழ்கினால், நாட்டின் குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் வேறு இடங்களில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

 

அன்றிலிருந்து மாலத்தீவில், ஜியோ இன்ஜினியரிங் மூலம், அவர்கள் ஒரு புதிய நகரத்தை உருவாக்கி வருகிறார்கள், அதற்கு அவர்கள் சிட்டி ஆஃப் ஹோப், (City of Hope) அதாவது ஹுல்ஹுமலே என்று பெயரிட்டுள்ளனர். இது 21 ஆம் நூற்றாண்டின் நகரம் என அவர்கள் கூறுகிறார்கள். 

மேலும் படிக்க | Kalpana Chawla: அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டது..!!!

தலைநகரான  மாலேயில் இருந்து 08 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த புதிய நகரத்தை கோவிட் முன் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த இடம் மாலேயில் இருந்து 20 நிமிடங்கள் மட்டுமே. இங்குள்ள பாலங்கள் வழியாக பல தீவுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஹுல்ஹுமலேவில் சுமார் 05 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 

மில்லியன் கணக்கான கன மீட்டர் மணலை நிரப்பி, இந்த புதிய செயற்கை தீவான ஹுல்ஹுமாலே கட்டப்பட்டுள்ளது. கடல் மேற்பரப்பில் அதிக அளவு மணலை நிரப்புவதன் மூலம் மாலத்தீவு மேலும் சில நகரங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

மேலும் படிக்க | விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் 'பாடி பில்டர்களாக' திரும்பின...!!!

Trending News