Is Jealousy Ok In A Relationship : பொறாமை என்பது, அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான உணர்வாகும். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே பொறாமை உணர்வு என்பது இருக்கும். இது, காதலன்-காதலி உறவில் மட்டுமல்ல, நட்பு, தாய்-தந்தை, தம்பி-தங்கை உள்ளிட்ட அனைத்து உறவுகளிலும் இது போன்ற பொறாமை உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் இது பலருக்கு க்யூட்டாக தோன்றினாலும், இது ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையையும் பாதிப்படைய செய்யலாம்.
காதலில் பொறாமை வருவது ஏன்?
காதலில் பொறாமை வருவது சில சமயங்களில் சிரிப்பையும், பல சமயங்களில் கடுப்பையும் ஏற்படுத்தலாம். உங்கள் காதலன் அல்லது காதலி உங்களிடம் யாராவது பேசும் போது பொறாமை ஏற்படும் போது, அவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அது, மென்மையானதாக, யாரையும் பர்சனல் ஆக தாக்காத வகையில் இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அது பெரும் கோபமாக அல்லது ஒரு கொடுமையாக மாறினால் அது குறித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
காதலில் பொறாமை ஏற்படுவதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, உங்கள் பார்ட்னருக்கு வரும் நார்மலான பொறாமை. இது ஏற்படும் போது, “நம்முடன் இருக்கும் இவரை, எந்த காரணத்திற்காகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது” என்று தோன்றும். இது, நம் காதலன்/காதலியை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் நம் வாழ்வில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு மேலோங்க செய்யும். இந்த வகையான பொறாமை பல சமயங்களில் காதலை வலுவாகலாம், உங்கள் ரிலேஷன்ஷிப்பில் பாசிடிவான மாறுதல்களை அறிமுகப்படுத்தலாம்.
இரண்டாவது வகை பொறாமையை கண்டால்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வகையான பொறாமை, உங்களுக்கு மிகவும் தீவிரமானதாகவும் பகுத்தறிவற்ற செயலாகவும் தோன்றும். இது போன்ற உறவுகள் கொடுமைக்கான (abuse)அறிகுறியாக இருக்கலாம். தன்னிடம் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையாலும், தன்னம்பிக்கை இல்லாத குணத்தாலும் ஏற்படலாம். இந்த வகை பொறாமை, எந்த உறவாக இருந்தாலும் அதனை சீர்குலைத்து விடும்.
மேலும் படிக்க | மெசேஜ் செய்தே காதலை வளர்ப்பது எப்படி...? பசங்களா நோட் பண்ணுங்க!
கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்..
>“இந்த பொறாமை உங்கள் உறவை சீர்க்குலைத்து விடுகிறதா?”
ஒரு சில உறவுகள் பிரிவதற்கு, பொறாமை மட்டுமே அடித்தளமாக அமையும். அந்த வகையில் நீங்கள் எதிர்பாலினத்தவர் யாரிடம் பேசினாலும் உங்கள் பார்ட்னர் கோபம் கொள்கிறாரா? அதை எப்படி வெளிப்படுத்துகிறார்? என்ற கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். இவை, உங்கள் உறவினை சீர்க்குலைக்கும் வகையில் இருக்கிறதா இல்லையா என்பதும் இதிலிருந்தே தெரிந்து விடும்.
>“என் பார்ட்னர் எனக்கு உண்மையாக இருக்கிறாரா?”
இந்த கேள்வி வருவது, காதல் உறவில் சகஜம்தான் என்றாலும், ஒரு சிலருக்கு 24*7 இதுவே மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இது போன்ற கேள்வி உங்களுக்குள்ளும் இருந்தால் உங்களுக்கு பொறாமை இருக்கிறது என்று அர்த்தம். எனவே, அதை களைய நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
>அவர்களின் தனிப்பட்ட பொருட்களை ஆராய்வது:
உங்கள் பார்ட்னர் அருகில் இல்லாத போது நீங்கள் அவரது போனை அல்லது தனிப்பட்ட பொருட்களை பார்ப்பதோ, அல்லது நீங்கள் அருகில் இல்லாத போது அவர் உங்கள் பொருட்களை பார்ப்பதோ சந்தேகத்தை காட்டுகிறது. எனவே, இது போன்ற நடவடிக்கைகள் இருந்தால், கண்டிப்பாக உங்கள் உறவை இன்னொரு முறை நீங்கள் எடை போடுவது அவசியமாகும்.
மேலும் படிக்க | எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? 7 ஈசியான டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ