IRCTC: ரயிலில் இரவில் பயணம் செய்பவர்களுக்கு புதிய விதிகள் அமல்!

IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2023, 06:45 AM IST
  • இரவில் ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்?
  • IRCTCன் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
  • மீறினால் ரயில்வேயின் மூலம் நடவடிக்கை எடுக்கபடும்.
IRCTC: ரயிலில் இரவில் பயணம் செய்பவர்களுக்கு புதிய விதிகள் அமல்! title=

IRCTC: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால், சக பயணிகள் மூலம் தொந்தரவு ஏற்படுவது, இரவு முழுவதும் விளக்குகளை எரிய வைப்பது, ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது போன்ற பொதுவான பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருந்தால், இனி இந்தப் பிரச்சனைகளுக்கு ஆளாக மாட்டீர்கள் . இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அனைத்து பயணிகளின் வசதியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் பயணம் செய்பவர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை மனதில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் மற்றும் வங்கிகளில் வட்டி எது அதிக பலன் தரும்?

இரவில் பயணம் செய்ய ரயில்வேயின் விதிகள்

  • ரயிலில் பயணிக்கும் எந்த பயணிகளும் மொபைல் போனில் சத்தமாகப் பேச அனுமதி இல்லை (மற்றவர்களை தொந்தரவு செய்யாத சத்தம் உள்ள வரை)
  • ரயிலில் பயணிக்கும் போது இயர்போன் இல்லாமல் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க கூடாது.
  • இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் விளக்குகளை எரிய வைக்க அனுமதிக்கப்படவில்லை. 
  • புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது ரயிலில் பொதுமக்களுக்கு எதிரான செயல்களை செய்ய கூடாது.
  • எளிதில் பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் இந்திய ரயில்வேயின் விதிகளுக்கு எதிரானது.
  • ரயிலில் குழுவாக பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக பேச கூடாது.
  • இரயில் இரவு 10 மணிக்கு மேல் உணவு வழங்க அனுமதிக்கப்படாது. இருப்பினும், பயணிகள் இரயிலில் இருக்கும்போது இ-கேட்டரிங் சேவைகள் மூலம் தங்கள் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.
  • நடுத்தர பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையில் படுக்க விரும்பினால், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம், கீழ் பெர்த் பயணிகள் புகார் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

ரயில்வே ஊழியர்களுக்கான விதிகள்

  • பயண டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) இரவு 10 மணிக்கு மேல் வந்து பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க அனுமதிக்கப்படமாட்டார்.
  • ஒரு பயணி மற்றொரு பயணியைப் பற்றி புகார் செய்தால், இரயில் ஊழியர்கள் இரவில் இருக்க வேண்டும்.
  • பயணிகள் தங்கள் ரயில்களைத் தவறவிட்டால், TTE மற்ற பயணிகளுக்கு ஒரு மணி நேரம் கழித்து அல்லது அடுத்த இரண்டு நிலையங்களைக் கடந்த பிறகு மட்டுமே தங்கள் இருக்கைகளை ஒதுக்க முடியும்.

பயணிகள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் என்ன நடக்கும்?

  • IRCTCன் புதிய விதிகளை யாராவது பின்பற்ற தவறினால் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • இந்த புதிய வழிகாட்டுதல்கள் வரும் நாட்களில் உங்களுக்கு வசதியான ரயில் பயணத்திற்கு உதவும் என்றாலும், சிலருக்கு சற்று கடினமாக இருக்கும். 

இரயிலில் பாதுகாப்பான இரவுப் பயணத்திற்கு

  • நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நாம் கவனிக்காமல், பல சமயங்களில் நம் போன்களில் மூழ்கி விடுகிறோம். நீண்ட ரயில் பயணத்தின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருட்டை தடுக்க உங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • ரயிலில் போர் அடிக்காமல் இருக்க சக பயணிகளுடன் பேசி வரலாம். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை கூற வேண்டாம். 
  • நீங்கள் அடிக்கடி தனியாகப் பயணம் செய்யும் பெண்ணாக இருந்தால், ரயிலில் பயணிக்கும்போது பாதுகாப்பற்றதாக உணர்ந்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தால் அவதிப்பட்டாலோ ரயில் டிக்கெட் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News