துபாய் டூர் பேக்கேஜ்.. அதுவும் ரொம்ப கம்மி விலையில்.. IRCTC அசத்தல் அறிவிப்பு

ஐஆர்சிடிசியின் துபாய் டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த சுற்றுலா தொகுப்பு டெல்லியில் இருந்து தொடங்கும். டூர் பேக்கேஜுக்கு டாஸ்லிங் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 22, 2023, 10:40 AM IST
  • ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் கட்டணம்.
  • டூர் பேக்கேஜின் ஆரம்ப விலை ரூ.95400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • துபாய் டூர் பேக்கேஜ் பற்றி விரிவாக இங்கே தெரிந்துக்கொள்வோம்.
துபாய் டூர் பேக்கேஜ்.. அதுவும் ரொம்ப கம்மி விலையில்.. IRCTC அசத்தல் அறிவிப்பு title=

ஐஆர்சிடிசி துபாய் டூர் பேக்கேஜ்: ஐஆர்சிடிசி (IRCTC) சுற்றுலா பயணிகளுக்காக துபாய் டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் மூலம், சுற்றுலா பயணிகள் துபாய்க்கு மலிவான விலையிலும் வசதியாகவும் செல்ல முடியும். இந்த டூர் பேக்கேஜ் டெல்லியில் இருந்து தொடங்கும், அபுதாபி மற்றும் துபாய் இடங்களை உள்ளடக்கும். ஐஆர்சிடிசி நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றுலா பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலா பயணிகள் மலிவாக பயணம் செய்வதுடன், சுற்றுலாவும் மேம்படுகிறது. ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ்களின் சிறப்பு என்னவென்றால், அவை சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவை இலவசமாக வழங்குகின்றன. இதனுடன், பல சுற்றுலா பேக்கேஜ்களில் பயணிகளுக்கு பயணக் காப்பீட்டு வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது ஐஆர்சிடிசியின் துபாய் டூர் பேக்கேஜ் பற்றி விரிவாக இங்கே தெரிந்துக்கொள்வோம்.

துபாய் டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்டது:
ஐஆர்சிடிசியின் துபாய் டூர் (DAZZLING DUBAI EX DELHI (NDO22)) பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த சுற்றுலா தொகுப்பு டெல்லியில் இருந்து தொடங்கும். டூர் பேக்கேஜுக்கு டாஸ்லிங் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் 12 பிப்ரவரி 2024 அன்று தொடங்கும். டூர் பேக்கேஜின் ஆரம்ப விலை ரூ.95400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே வெளியிட்ட மாஸ் டூர் பேக்கேஜ்

ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்வார்கள். சுற்றுலா பயணிகள் கம்ஃபர்ட் வகுப்பில் பயணிப்பார்கள். இந்த டூர் பேக்கேஜ் 25 பிப்ரவரி 2024 அன்று மீண்டும் தொடங்கும். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சுற்றுலா தொகுப்பில் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.

ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் கட்டணம்:
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜுக்கான கட்டணம் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.116500 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்த டூர் பேக்கேஜில் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.97800 கட்டணம் செலுத்த வேண்டும். டூர் பேக்கேஜில் மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.95400 செலுத்த வேண்டும். இந்த டூர் பேக்கேஜில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்தால், ரூ.92600 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையில்லாமல் கட்டணம் ரூ.82100 ஆக இருக்கும்.

டூர் பேக்கேஜின் சிறப்பம்சங்கள்:
பேக்கேஜின் பெயர்: டாஸ்லிங் துபாய்
இலக்கு: துபாய்
பயண முறை: விமானம் (ஏர் அரேபியா)
வகுப்பு: கம்ஃபர்ட்
பயணத் தேதி: 12.02.2024 & 25.02.2024
உணவுத் திட்டம்: MAP (காலை உணவு, இரவு உணவு)

மேலும் படிக்க | EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News