கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு  தனது நீண்டகால காதலி வினி ராமனை திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.  

Written by - RK Spark | Last Updated : Nov 17, 2023, 10:09 AM IST
  • ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்.
  • தமிழ் பாரம்பரியம் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
  • தமிழ் பாரம்பரியம் படி திருமணம் செய்து கொண்டனர்.
கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! title=

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தனது பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்ட் திறமைகளுக்கு பெயர் பெற்றவர். அதிரடி பேட்டிங் மற்றும் துடிப்பான ஸ்பின் பவுலிங்கிற்கு பேர் பெற்றவர். 2023 உலகக் கோப்பையில் அவரது சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலியா அணியை பைனல் போட்டி வரை கொண்டு சென்றுள்ளது.  மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது நீண்டகால காதலி வினி ராமனை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி கிறிஸ்தவ முறையிலும் மற்றும் தமிழ் பாரம்பரியம் படியும் திருமணம் செய்து கொண்டனர்.  

மேலும் படிக்க |  IND vs NZ: ஜெய் ஷா உடன் ரஜினிகாந்த்... அரையிறுதி போட்டியை காண வந்த பிரபலங்கள் லிஸ்ட்!

வினி ராமன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

தமிழகத்தை சேர்ந்த வினி ராமன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்து வளர்ந்தார், அங்கு மருத்துவ அறிவியலில் தனது கல்வியை முடித்தார். வினி ராமன் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரிகிறார். எப்போது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக உள்ளவர் வினி ராமன்.  வினி ராமன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் வெங்கட் மற்றும் விஜயலக்ஷ்மி ராமன், மேலும் இவருக்கு மது என்ற மூத்த சகோதரி உள்ளார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளந்தாலும் இந்திய கலாச்சாரத்தை எப்போதும் பின்பற்றி வந்துள்ளார்.  இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகளை கொண்டாடுகிறார், ஆங்கிலம் தவிர சரளமாக தமிழும் பேசுகிறார் வினி ராமன்.

வினி ராமன் மற்றும் மேக்ஸ்வெல் இடையே காதல் மெல்போர்னில் தொடங்கி உள்ளது.  இருவருக்கும் பார்த்த உடனேயே பிடித்து போக டேட்டிங் செய்ய தொடங்கினர். 2017ல் வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மேக்ஸ்வெல்லுடன் எடுத்து கொண்ட படத்தை பகிர்ந்து தங்கள் காதலை உலகிற்கு வெளிப்படுத்தினர். வினி ராமன் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல்லுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளில் கலந்துகொண்டார். இந்த ஜோடி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டையும் பெற்றது.  வினி ராமன் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பிப்ரவரி 2020ல் மெல்போர்னில் இந்திய பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.  இறுதியாக மார்ச் 2022ல், கிறிஸ்தவ மற்றும் தமிழ் கலாச்சாரங்களின் படி திருமணம் செய்து கொண்டனர். முதலில் மார்ச் 18 அன்று தேவாலயத்தில் திருமணத்தை நடத்தினர், பின்னர் மார்ச் 27 அன்று தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தினர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vini Maxwell (@vini.raman)

வினி ராமன் எப்போதும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பற்றி விழிப்புடன் இருக்கும் பெண்ணாக உள்ளார்.  தன்னை அமைதியாகவும் சமநிலையாகவும் வைத்திருக்க எப்போது யோகா பயிற்சி செய்கிறார்.  அவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதோடு, ஆரோக்கியமாக இருக்கவும் ஊக்குவிக்கிறார்.  வினி ராமன் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளுக்குச் சென்றுள்ளார்.  வினி ராமனுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 200,000 க்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்களையும், ட்விட்டரில் 50,000 க்கும் அதிகமான பாலோவர்ஸ்களையும் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | டாஸில் கோல்மால் செய்கிறாரா ரோஹித்...? முன்னாள் பாக். வீரர் சொல்லும் காரணத்தை பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News