ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய ரயில்வே முடிவு

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2019, 06:59 PM IST
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய ரயில்வே முடிவு title=

புதுடெல்லி: அக்டோபர் 2 முதல் 50 மைக்ரான் தடிமன் கொண்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்குமாறு ரயில்வே அமைச்சகம் இன்று (புதன்கிழமை) அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் உத்தரவிட்டது. ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை குறித்து இந்திய ரயில்வே ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும்.

ரயில் நிலையங்களிலும் செயல்படும் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் கேரி பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் அதை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து ரயில்களிலும் தூக்கி எறியப்படும் காலி தண்ணீர் பாட்டில்களை ரயில்வே ஊழியர்கள் சேகரித்து, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

50 மைக்ரான்களுக்கு குறைவாக தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தடை செய்யப்படுகின்றன. 50 மைக்ரான்களுக்கு கூடுதலாக தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அனைத்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் முழுவதுமாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News