உத்தரகாண்ட் சுற்றுலா செல்ல பிளானா... சில டாப் இடங்கள் இதோ..!!

Best Places to Visit in Uttarakhand: உத்தரகாண்ட்  ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் நிறைந்தது. இந்த மாநிலம் வட இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும்.விடுமுறையில் குடும்பம், நண்பர்கள் அல்லது காதலியுடன் சுற்றுலா செல்ல, உத்தரகண்ட் மாநிலத்தை விட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2024, 12:56 PM IST
  • உத்தரகாண்டில் உள்ள 5 சிறந்த இடங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்க மிகவும் அழகான இடங்களில் ஒன்று.
  • ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மிக அழகான நகரம்.
உத்தரகாண்ட் சுற்றுலா செல்ல பிளானா...  சில டாப் இடங்கள் இதோ..!! title=

Best Places to Visit in Uttarakhand: உத்தரகாண்ட்  ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் நிறைந்தது. இந்த மாநிலம் வட இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு பார்க்க பல இடங்கள் உள்ளன.  விடுமுறையில் குடும்பம், நண்பர்கள் அல்லது காதலியுடன் சுற்றுலா செல்ல, உத்தரகண்ட் மாநிலத்தை விட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. கோடை கால்த்திற்கு மிக ஏற்ற இடமான இங்கு இயற்கையின் அழகிய காட்சிகளையும் காணலாம். உத்தரகாண்டில் உள்ள 5 சிறந்த இடங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1) நைனிடால்

குமாவோன் மலைத்தொடர்களில் அமைந்துள்ள நைனிடால், அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. இந்த நகரத்தின் ஏரிகள், பசுமை மற்றும் மலைகள் இந்த நகரத்தின் அழகை மேலும் மேம்படுத்துகிறது. இங்கு குளிர்ச்சியான வானிலையை அனுபவிப்பதோடு, படகு சவாரி போன்றவற்றையும் அனுபவிக்கலாம். கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்க மிகவும் அழகான இடங்களில் (Tourism) இதுவும் ஒன்று.

2) ரிஷிகேஷ்

ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மிக அழகான நகரம். இங்குள்ள மலைகள் இந்த இடத்தை இன்னும் அழகாக்குகின்றன. புனிதமான கோயில்கள், மலைத்தொடர்கள், அமைதியான ஆசிரமங்கள் மற்றும் பசுமையான காடுகளால் சூழப்பட்ட இந்த அமைதியான நகரம் அனைவருக்கும் ஏதோவொன்றைக் கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் யோகா, தியானம், ராஃப்டிங் மற்றும் மலையேற்றம் போன்ற செயல்களை அனுபவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இங்கு நீங்கள் லக்ஷ்மன் ஜூலா, திரிவேணி காட், குஞ்சாபுரி தேவி கோயில் மற்றும் பரமார்த் நிகேதன் ஆசிரமம் போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

மேலும் படிக்க | கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

3) ஹரித்வார்

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மத நகரமான ஹரித்வார் பற்றி அனைவரும் அறிந்ததே. இந்த நகரம் கும்பமேளாவிற்கும் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து கங்கா ஆரத்தி மற்றும் படித்துறையில் ஸ்நானம் செய்கின்றனர். இங்கே நீங்கள் மான்சா தேவி கோவில், சண்டி தேவி கோவில் மற்றும் ராஜாஜி தேசிய பூங்காவிற்கும் செல்லலாம். குடும்பத்தினருடன் செல்ல இது சிறந்த இடம்.

4)  ராணிகேத்

ராணிகேத் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். நீங்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த இடம் விடுமுறை நாட்களை கழிக்க ஏற்றது. நீங்கள் விரும்பினால், உங்கள் குடும்பத்துடன் இங்கு வரவும் திட்டமிடலாம். ராணிக்கேட்டின் அழகிய காட்சிகளுடன்,  பல அற்புதமான சுற்றுலாத் தலங்களையும், பாராகிளைடிங், மலையேற்றம் மற்றும் முகாம் போன்ற சாகசச் செயல்களையும் அனுபவிக்க முடியும்.

5)  முசோரி

முசோரி என்ற இடத்தின் பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க முடியாது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலாப் பயணிகள் முசோரியின் இயற்கை அழகு, மலைகள் மற்றும் மலையேற்ற சாகசங்களை மிகவும் விரும்புகிறார்கள். இங்குள்ள மலைகளின் அழகிய காட்சிகள் மக்களை மீண்டும் மீண்டும் முசோரிக்கு வர தூண்டுகிறது.

மேலும் படிக்க | குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News