உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது!!

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது!

Last Updated : Nov 19, 2019, 12:12 PM IST
உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது!! title=

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இது இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (DCGI) ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தடை ஊசியின் பலன் 13 ஆண்டுகளாக பயனுள்ளதாக இருக்கும், அதன் பிறகு அது அதன் திறனை இழக்கிறது. இது அறுவைசிகிச்சை வாஸெக்டோமிக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலகில் கிடைக்கும் ஒரே ஆண் கருத்தடை முறையாகும். இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

"தற்போது, தயாரிப்பு தயாராக உள்ளது. மருந்துகள் கட்டுப்பாட்டாளரிடம் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. சோதனைகள் முடிந்துவிட்டன. இதில், மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்திருப்பதோடு, இந்த ஆண் கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இதனை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தயாரிப்பை உலகின் முதல் ஆண் கருத்தடை என்று பாதுகாப்பாக அழைக்கலாம், ”என்று ICMR-ன் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா கூறினார்.

ICMR என்பது உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியாவின் உச்ச அமைப்பாகும். இதற்கு மத்திய அரசு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருத்துவ ஆராய்ச்சித் துறை மூலம் இந்திய அரசு நிதியளிக்கிறது. ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியபோது, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, அந்நாடு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Trending News