புதுடெல்லி: இந்திய வங்கி செயல்முறைகளில் சில பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூன்று வங்கிகளின் காசோலை புத்தகம் மற்றும் எம்ஐசிஆர் குறியீடு அக்டோபர் 1 முதல் செல்லாது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC), யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை அந்த மூன்று வங்கிகள் ஆகும்.
1 ஏப்ரல் 2020 அன்று, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) இணைக்கப்பட்டன. இப்போது இந்த வங்கிகளின் வாடிக்கையாளர் முதல் வங்கிகளின் கிளைகள் வரை அனைத்தும் பிஎன்பி-க்கு சொந்தமானவை. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு 1 ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வந்தது.
அலகாபாத் வங்கியின் MICR குறியீடு மற்றும் காசோலை புத்தகம் 30 செப்டம்பர் 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று இந்தியன் வங்கி சமீபத்தில் ஒரு ட்வீட்டில் தெரிவித்தது. எந்தவொரு இடையூறும் இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளைத் தொடர, வாடிக்கையாளர்கள் 1 அக்டோபர் 2021 க்கு முன் புதிய காசோலை புத்தகங்களை பெற வேண்டும்.
ALSO READ:இந்தியன் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின் உங்கள் செக் புக் செல்லாது
இந்தியன் வங்கியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகங்களைப் பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் இணைய வங்கி (Internet Banking/Online Banking) அல்லது மொபைல் பேங்கிங் (Mobile Banking) மூலமும் விண்ணப்பிக்கலாம்.
PNB சமூக ஊடகங்கள் மூலம், "அக்டோபர் 1, 2021 முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (UBI) ஆகியவற்றின் பழைய காசோலை புத்தகங்கள் பயன்பாட்டில் இருக்காது. தயவுசெய்து OBC மற்றும் UBI இன் பழைய காசோலை புத்தகத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் மாற்றவும். இந்த காசோலை புத்தகம் PNB-யின் அப்டேட் செய்யப்பட்ட IFSC குறியீடு மற்றும் MIRC உடன் வரும்." என்று கூறியுள்ளது.
புதிய காசோலை புத்தகத்தை (Cheque Book) பெற, ஏடிஎம், இணைய வங்கி அல்லது பிஎன்பி ஒன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
ALSO READ:SBI customers alert: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கிய எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR