December 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால், வீண் பண விரயம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 08:38 AM IST
  • ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT டிசம்பர் 31, 2021 வரை நீட்டித்துள்ளது.
  • வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சில ஓய்வூதியதாரர்களுக்கு எந்த காலக்கெடுவும் இல்லை.
December 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால், வீண் பண விரயம் title=

புதுடெல்லி: ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாத இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நாம் செய்ய வேண்டிய பல முக்கியமான பணிகள் உள்ளன. 

காலக்கெடுவிற்கு முன் இந்த பணிகளை நீங்கள் செய்து முடிக்கவில்லை என்றால், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return File) செய்வதற்கான கடைசி தேதி 31 டிசம்பர் 2021 ஆகும்.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், பல வரி செலுத்துவோர் காலக்கெடு முடிந்த பிறகும் அபராதம் எதுவும் செலுத்தாமல் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யலாம். 2020-21 நிதியாண்டிற்கான ITR ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT டிசம்பர் 31, 2021 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடிஆர்-ஐ எவ்வாறு தாக்கல் செய்வது (e-filing portal)

நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். இதற்கான எளிதான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

- முதலில் incometax.gov.in என்ற இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்
- பின்னர் Login பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பயனர்பெயரை உள்ளிட்டு continue பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இப்போது e-file டேப்பில் கிளிக் செய்து, File Income Tax Return ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- 2021-22 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து, continue என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் 'ஆன்லைன்' அல்லது 'ஆஃப்லைன்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
- ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.
- இப்போது 'பர்சனல்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்தது continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.

ALSO READ:LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? 

- ITR-1 அல்லது ITR-4, இரண்டிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.
- விலக்கு வரம்பின் மேல் அல்லது  பிரிவு 139(1) இன் கீழ் 7வது விதியின் கீழ் Return-க்கான காரணம் கேட்கப்படும். 
- ஐடிஆர் ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.
- இப்போது ஐடிஆர் தாக்கல் செய்ய புதிய பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள். 
- உங்கள் ஐடிஆரைச் சரிபார்த்து, வருமான வரித் துறைக்கு ஒரு பிரதியை அனுப்பவும்.

2. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு

ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும். அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆக இருந்தது. இது 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காத அரசு ஓய்வூதியர்களுக்கு (Govt Pensioners) பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தற்போது சான்றிதழை சமர்ப்பிக்க மேலும் 30 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும், சில ஓய்வூதியதாரர்களுக்கு எந்த காலக்கெடுவும் இல்லை. சமீபத்தில் EPFO ​​இதை தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ:ஆதார் அட்டை தயாரிப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றம்! UIDAI முக்கிய தகவல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News