வாகனம் ஓட்டும்போது இந்த விதிகளை மீறினால், அபராதத்துடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் (Driving License) பறிமுதல் செய்யலாம்.
ஓட்டுநர் உரிமம் ((Driving License): சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், சாலைகளை பாதுகாப்பானதாக ஆக்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை அரசு அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதனுடன், சாலை பாதுகாப்பு வாரம் என பிற வழிகளிலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.
இருப்பினும், சிலர் போக்குவரத்து விதிகளை புறக்கணிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க, போக்குவரத்துத் துறையும் இதற்காக கடுமையான அபராதம் விதித்து வருகிறது.
அந்த வகையில் கீழ்கண்ட 6 விதிகளை மீறினால், உங்கள் டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல் செய்யப்படலாம்.
1. நீங்கள் இசையை, பாடலை ரசித்துக் கொண்டே காரை ஓட்டலாம். ஆனால், அது மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாகவோ, அல்லது தொந்தரவாகவோ இருக்க கூடாது. இது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறசெய்து விபத்து ஏற்பட வழிவகுக்கும். இதற்கு 100 ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதிப்பதோடு, ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்யலாம்.
2. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதையும் சசாகசத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு செய்வதால் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்யக்கூடும். வேக வரம்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, குறிப்பாக பள்ளி அல்லது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலைகளில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் மேல் ஓட்ட வேண்டாம்.
ALSO READ | ஆதார் அட்டை போல் திருமணத்தின் மெனு கார்டை வடிவமைத்த ஜோடி; வைரலாகும் புகைப்படம்
3. வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து தப்பிக்க, புளூடூத் சாதனம் மூலம் வாகனம் ஓட்டும்போது பலர் தொலைபேசியில் பேசுகிறார்கள். ஆனால் இதுவும் சட்டவிரோதமானது மற்றும் அவ்வாறு செய்வதால் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓட்டிநர் உரிமத்தை பறிமுதல் செய்யக்கூடும்.
4. சாலையில் உள்ள ஜீப்ரா கிராஸீங் என்பது பாதசாரிகள் சாலையைக் கடக்கக் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பலர் சிக்னலில், சிவப்பு விளக்கு இருக்கும் போது கூட ஜீப்ரா கிராசிங்கை கடந்து செல்ல வாகனத்தை ஓட்டுகிறார்கள். அதற்கு உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இது மட்டுமல்லாமல், உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சில மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யலாம்.
5. நாடு முழுவதும் பிரஷர் ஹார்ன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உங்கள் வாகனத்தில் பிரஷர் ஹார்ன் வைத்திருப்பது சட்டவிரோதமானது. இந்த விதியை மீறினால் ஒட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், கடுமையான அபராதமும் விதிக்கப்படலாம்.
6. ஆம்புலன்ஸ் அல்லது அவசர சேவைகள், சாலையில் முந்தி செல்ல அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. இதனால் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நபரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் சிலர் ஆம்புலன்ஸ் செல்ல கூட வழி கொடுப்பதில்லை. இதற்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படலாம்.
ALSO READ | Health Tip: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR