ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும்... உங்களுக்கு ரூ. 5 லட்சம் கிடைக்கும் - எப்படி தெரியுமா?

ATM Cardholders: ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி பல சேவைகளை அளிக்கும் நிலையில், நீங்கள் ரூ. 5 லட்சம் வரையிலான பலனையும் பெறலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2023, 04:09 PM IST
  • அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகிறது.
  • இந்த வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.
ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும்... உங்களுக்கு ரூ. 5 லட்சம் கிடைக்கும் - எப்படி தெரியுமா? title=

ATM Cardholders: உங்களிடம் ஏதேனும் வங்கியின் ஏடிஎம் கார்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.5 லட்சம் பலன் அளிக்கப்படும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பல வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களிடமும் ஏடிஎம் கார்ட் இருந்தால், 5 லட்சம் வரையிலான பலனை எவ்வாறு பெறலாம் என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.

இது என்ன வசதி?

நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ரூ.5 லட்சம் வரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என கேள்வி எழலாம். ஒவ்வொரு வங்கியின் சார்பிலும், ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Old Pension Scheme ஜாக்பாட் அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியத் திட்டம்!!

இலவச காப்பீடு பெறுங்கள்

ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பல இலவச சேவைகளைப் பெறுகிறார்கள். அதில், காப்பீடு முக்கிய வசதிகளில் ஒன்றாகும். வங்கியால் ஒரு வாடிக்கையாளருக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன், அந்த வாடிக்கையாளரின் விபத்துக் காப்பீடும் ஒருபுறம் தொடங்கும். இந்த காப்பீடு குறித்து பலருக்கும் தெரியாது.

பிளாட்டினம் அட்டையில் ரூ.5 லட்சம் காப்பீடு

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, வங்கி பல்வேறு வகையான காப்பீடுகளை வழங்குகிறது. கிளாசிக், பிளாட்டினம் மற்றும் ஆர்டினரி என கார்டு வகைகள் உள்ளன. சாதாரண மாஸ்டர் கார்டில் ரூ. 50 ஆயிரம் காப்பீடும், கிளாசிக் ஏடிஎம் கார்டில் ரூ.1 லட்சமும், விசா கார்டில் ரூ.1.5 முதல் 2 லட்சமும், பிளாட்டினம் கார்டுக்கு ரூ.5 லட்சமும் காப்பீடு கிடைக்கும். 

எப்படி விண்ணபிப்பது?

ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவர்கள் விபத்தில் இறந்தால், 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். மறுபுறம், ஒரு கை அல்லது ஒரு கால் சேதமடைந்தால், அதன் பேரில் 50,000 ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும். இதற்கு வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அட்டைதாரரின் நாமினி விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு: டிஏ மட்டுமல்ல, இன்னும் பல கொடுப்பனவுகள் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News