How To Speak In English Fluently : ஆங்கிலம் என்பது, இன்றைய நாளில் இன்றியமையாத மொழியாக மாறிவிட்டது. வேறு மொழி தெரிந்தவருடன் பேசுவதற்கு மட்டுமல்ல, நம் தாய் மொழி பேசும் போது கூட, நுனிநாக்கில் பலருக்கு ஆங்கிலம் தவழ்வதை பார்த்திருப்போம். இது ஒரு மொழி தானே தவிர, தனிப்பட்ட அறிவு கிடையாது. அதை தெரிந்து கொள்வதும், தெரிந்து கொள்ளாமல் போவதும் முற்றிலும் நமது விருப்பம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும், புடித்து படித்தால் அது விரைவில் நம் கைக்குள் வந்து விடும் என்பதையும் மனதில் நிறுத்த வேண்டும். அந்த வகையில், ஆங்கிலத்தையும் கிளாஸிற்கு செல்லாமல் எப்படி கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஆங்கிலம் உங்களை சுற்றி இருக வேண்டும்:
தினசரி, உங்களை சுற்றி ஆங்கிலம் குறித்த விஷயங்கள் இருப்பது போன்ற சூழலை அமைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்து ஆங்கில நாளிதழ் படிப்பதில் இருந்து, ஆங்கிலத்தில் செய்தி கேட்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதனால், உங்களுக்கு புதிய வார்த்தைகள் தெரிய வரும். அழகாக ஆங்கிலமும் பழகும்.
ஆங்கிலத்தில் நண்பர்களை பிடிப்பது:
ஆங்கிலத்தில் உங்களுக்கு பேச தெரியவில்லை என்றாலும் கூட, ஆங்கிலம் பேச தெரிந்த நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளலாம். அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசும் போது, உங்களுக்கும் அந்த மொழி பழகும்.
பார்ட்னர்:
உங்களை போலவே, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் நபரை கூட்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால், உங்களுக்கு போர் அடிக்காமல் உடன் படிக்க ஒரு ஆள் கிடைத்ததோடு மட்டுமன்றி, நீங்கள் துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் அவர் உங்களை மோட்டிவேட் செய்வார்.
ஆங்கிலம் பயில்வதற்கான புத்தகங்கள்:
உங்களது ஆங்கில ஆளுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். மிகவும் குறைந்த ஆங்கிலம்தான் தெரியும் என்றால், அதற்கு ஏற்றார் போல புத்தகத்தை வாங்கவும். அது மட்டுமன்றி, இணையதளங்களில் ஆங்கில இலக்கணம் சொல்லி தருவதற்கும், சரளமாக ஆங்கிலம் பேச சொல்லித்தருவதற்கும் பல வீடியோக்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இத்தனை நாடுகள் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுகின்றனரா?
ஆன்லைன்:
மொழி கற்றுக்கொள்வதற்கு, பல தளங்களும் செயலிகளும் இருக்கின்றன. அதில் இலவசமாகவே உங்களுக்கு நீங்களே ஆங்கிலம் கற்பித்துக்கொள்ளலாம். அவற்றை ஆராய்ந்து செயல்படுங்கள்.
தினசரி இலக்குகள்:
தினமும், இத்தனை வார்த்தைகள் அல்லது இத்தனை வாக்கியங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை உங்களுக்கு நீங்களே நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஆங்கில பயிற்சியில் நீங்களே மாற்றங்களை பார்க்கலாம்.
புத்தகம் அல்லது திரைப்படங்கள்:
ஆங்கிலத்தை பாட புத்தகங்கள் அல்லது பயிற்சி மையங்கள் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்கள் மற்றும் கதைப்புதத்கங்கள் மூலமாக கூட, ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம். முதலில், ஒரு இந்திய எழுத்தாளர் எழுதிய கதைப்புத்தகத்தில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். புரியாத வார்த்தைகளுக்கான அர்த்தங்களை கற்றுக்கொள்ளுங்கள். பின்பு சப்டைட்டில்ஸ் உடன் படம் நல்ல ஆங்கில திரைப்படங்களை பார்க்க ஆரம்பியுங்கள். உங்களுக்கே தெரியாமல் ஆங்கிலம் உங்கள் நாவில் ஒட்டிக்கொள்ளும். முக்கியமாக, எந்த மொழி கற்றுக்கொண்டாலும் உங்கள் தாய் மொழியை மறவாதீர்கள். பிற மொழிகள் உங்களுக்கு உலக அறிவை கொடுத்தாலும் தாய்மொழிதான் ஆழ்ந்த அறிவை கொடுக்கும்.
மேலும் படிக்க | குழந்தைகளை சரளமாக ஆங்கிலம் பேச வைப்பது எப்படி? எளிமையான டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ