சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பலரின் கனவுகளை நிறைவேற்றுவது வங்கிகள் தான். அவை குறைவான வட்டியில் வங்கிக் கடனை வழங்கி இம்எம்ஐ என்ற மாதத் தவணையில் வட்டி மற்றும் அசலை வசூலிக்கின்றன. இது ஒருவகையில் வரப்பிரதசாதமாக இருந்தாலும், அதிக இஎம்ஐ செலுத்துவதும் பயனாளர்களுக்கு சுமையாக இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே வங்கியில் கடன்வாங்கி, இம்எம்ஐ செலுத்திகிறீர்கள் என்றால், இந்த வழிமுறையைப் பயன்படுத்தி மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசிக்காரர்கள் மீது பண மழை: இனி யோசிக்காம செலவு செய்யலாம்
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில ஆண்டுகளில் 8 முதல் 9 விழுக்காடு வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய சூழலில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் என்பது குறைந்து 7 விழுக்காடு வட்டியில் கூட வீட்டுக் கடன்களை பெற்றுக் கொள்ள முடியும். அதனால், ஏற்கனவே, நீங்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, இஎம்ஐ செலுத்திக் கொண்டிருப்பவர் என்றால், இந்த வழிமுறையைப் பயன்படுத்தினால் உங்களுக்கான இஎம்ஐ தொகை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை குறையும்.
நீங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2017ல் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் உங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி 9.25 விழுக்காடு இருந்திருக்கும். அந்தக் கடனை இப்போது, 7 விழுக்காடு வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிக்கு மாற்றினால், குறைந்தபட்சம் உங்களின் இஎம்ஐ மாதம் 5 ஆயிம் ரூபாய் வரை குறையும். 2017ல் கடன் தொகையாக நீங்கள் 30 லட்சம் வாங்கியிருந்தால், 9.25 விழுக்காடு வட்டியில் 20 ஆண்டுகளுக்கு 27 ஆயிரத்து 476 ரூபாய் இஎம்ஐ செலுத்திக் கொண்டிருப்பீர்கள்.
மேலும் படிக்க | சனியால் இந்த ராசிக்காரர்களுக்கு 141 நாட்கள் சோதனையான காலமாக இருக்கும்: ஜாக்கிரதை
அதே தொகையை இப்போது நீங்கள் புதிய வங்கிக்கு மாற்றும்போது உங்களின் கடன் தொகை 26 லட்சம் ரூபாயாக இருக்கும். 6.90 விழுக்காடு வட்டியில் 16 ஆண்டுகளுக்கு 22,400 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கும் வட்டியில் இருந்து குறைவான இஎம்ஐயில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிக்கு, கடனை மாற்றினால், உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். மேலும் கூடுதலாக கட்ட வேண்டிய தொகையில் குறைந்தபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை உங்களின் அசல் சேமிப்பாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR