செல்போனுக்கு அடிமையாகி கிடக்கிறீர்களா? மீண்டு வர எளிமையான வழிகள்...

How To Recover From Phone Addiction : நம்மில் பலர், சமீப காலமாக, செல்போன் பயன்பாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறாேம். இதை தவிர்ப்பது எப்படி?   

Written by - Yuvashree | Last Updated : Aug 26, 2024, 04:23 PM IST
  • செல்போன் உபயோகத்தில் இருந்து தப்பிப்பது எப்படி
  • இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும்?
  • தடுத்து நிறுத்த ஈசியான டிப்ஸ்!
செல்போனுக்கு அடிமையாகி கிடக்கிறீர்களா? மீண்டு வர எளிமையான வழிகள்... title=

How To Recover From Phone Addiction : உலகில் நொடிக்கு நொடி நிகழும் பல்வேறு விஷயங்களும், தற்போது அவ்வப்போது நமது கைக்குள் இருக்கும் செல்போன்களில் வந்து விடுகின்றன. செல்போன் சாதனம், பல்வேறு கண்டங்களை தாண்டி இருப்பவர்களை கணெக்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் நமக்கு தேவையற்ற விஷயங்கள் பலவற்றையும் வேண்டுமென்றே நம் கண்முன் காட்டுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர், அத்தியாவசிய தேவைக்கு என்று மட்டும் இருந்த இந்த சாதனம், இப்போது அடிப்படை தேவையாக மாறிவிட்டது. இதனால், படிக்க வேண்டிய வயதில் இருப்பவர்களும் கூட செல்போனுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கின்றனர். அவர்கள், எந்த மாதிரியான விஷயங்களை செய்தால் இதிலிருந்து மீண்டு வரலாம்? இதோ சில டிப்ஸ். 

ஒரு நாளைக்கு ஓரம் கட்டுங்கள்:

இது, செல்போன் அடிமைத்தனத்தி இருந்து மீண்டு வர முதல் மற்றும் எளிமையான முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்தில், ஒரு நாளை மட்டும் தேர்வு செய்யுங்கள். அந்த நாளில் உங்கள் செல்போனின் பக்கமே போகாதீர்கள். முதல் வாரம் கொஞ்சம் சிரமம் தெரியும். அடுத்தடுத்த வாரங்களில் அதுவே பழகி விடலாம். 

காலையில் எழுந்தவுடன்...

நம்மில் பலர், காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்க்கும் பழக்கத்தை வைத்திருப்போம். எழுந்து கொள்வதற்காக அலாரம் வைக்கும் நாம், அது அலரு போது ஆஃப் செய்து விட்டு அப்படியே சமூக வலைதளங்களின் பக்கம் செல்வோம். இப்படி, உங்கள் நாளை செல்போனுடன் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக, எழுந்து உங்கள் வேலைகளை முடித்த பிறகு போனை எடுத்துக்கொள்கிறேன் என மனதில் உறுதி வையுங்கள். மாற்றம் ஏற்படலாம். 

மேலும் படிக்க | செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்வதால் இத்தனை பாதிப்புகள் வருமா..?

பயன்பாட்டை கட்டுப்படுத்துதல்...

அனைத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐ போன்களிலும் குறிப்பிட்ட சில ஆப்களை இவ்வளவு நேரம்தான் உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. எனவே, அதை ஆன் செய்யுங்கள். அப்படி இல்லையே, தினமும் “இன்று 30 நிமிடம் மட்டுமே போன் உபயோகிப்பேன்” என்றும் “முக்கியமான நேரங்களில் போனை உபயோகிக்க மாட்டேன்” என்றும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். 

கவனம் செலுத்துதல்..

உங்களுக்கு போன் அதிகமாக உபயோகிக்கிறோம் என்ற உணர்வு இருப்பதால்தான், இந்த பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என நினைக்கிறீர்கள். எனவே, போனிற்கு கொடுக்கும் கவனத்தை நாம் இன்னொரு வேலைக்கு கொடுக்கலாம் என உங்கள் மனதை நீங்களே தயார்படுத்தி கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் நெடுநாட்களாக இயற்கையை ரசிப்பதற்காக கடற்கறைக்கு செல்ல வேண்டும் என நினைத்திருக்கலாம். அப்படி நினைத்து, அதை செய்யாமலேயே இருந்திருக்கலாம். இது போல நீங்கள் நெடு நாட்களாக செய்ய நினைத்த விஷயங்களை ஒரு நாள் கையில் செல்போன் வைத்துக்கொள்ளாமல் செய்து முடியுங்கள். 

உதவி..

போதை பழக்கம் போல, செல்போன் பயன்பாடும் ஒரு தீய பழக்கம்தான். எனவே, இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று நினைப்பதிலோ அல்லது இதன் மூலம் உங்கள் வாழ்க்கை முன்னேறாதது போல நினைப்பதிலோ எந்த தவறும் இல்லை. ஆனால், இதை ஒரு பெரும் அவமானமாக நினைத்துக்கொண்டு யாரிடமும் உதவி கேட்காமல் இருக்க வேண்டாம். உங்களுக்கு நெருங்கிய நண்பர்களிடம் அல்லது சரியான மனநல மருத்துவம் படித்த நிபுணரிடம் உதவியை கேட்டு நாடுவதில் எந்த தவறும் இல்லை. 

மேலும் படிக்க | செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள்! பகீர் தகவல்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News