நீளமான முடியை பராமரிப்பது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்!

Hair Care Tips Tamil: பலருக்கு தங்களது நீளமான முடியை வளர்ப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும். அவர்களுக்காகவே இந்த சிம்பிள் டிப்ஸ். 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 06:09 PM IST
  • நீளமான முடியை பராமரிப்பது எப்படி?
  • உடைந்த முடிகளை ட்ரிம் செய்ய வேண்டும்.
  • இன்னும் சில டிப்ஸ்கள் இதோ.
நீளமான முடியை பராமரிப்பது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்! title=

வெகு சிலருக்கு மட்டுமே ஷார்ட் ஹேர் எனப்படும் குட்டியான முடியை பிடிக்கும். நம் ஊரில் பெரும்பாலான பெண்கள் நீளமான முடியுடனே வலம் வருகின்றனர். இவர்களில் பலருக்கு முடியை எப்படி ஆரோக்கியமான முறையில் வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். 

1.அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டும்:

ட்ரிம் செய்வது என்றால் முடியை வெட்ட வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. 6-8 வாரத்திறு ஒரு முறை அடிமுடியை வெட்டி விட வேண்டும். இது, உடைந்த முடியை நன்றாக உள்ள முடியில் இருந்து நீக்க உதவும். ஏற்கனவே உடைந்த முடி இன்னும் உடையாமல் பார்த்துக்கொள்ளவும் இது உதவும். ட்ரிம் செய்ய, அடி முடியை அரை இன்ச் கட் செய்தால் போதும். 

2.குறைவான ஷாம்பூ பயன்பாடு:

அதிகமாக ஷாம்பூ போட்டு முடியை அலசுவதால் உச்சந்தலையில் பல பிரச்சனைகள் உண்டாகும். இதனால், முடி வளர்வதில் பிரச்சனை ஏற்படும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை நீங்கள் முடியை அலசுபவராக இருந்தால் கண்டிப்பாக கண்டீஷனர் உபயோகிப்பது அவசியம். ஷாம்பூவை தண்ணீரில் கலந்தும் உபயோகிக்கலாம். இதனால் முடி நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது.

3.முடியை துவட்டும் போது கவனம்..

குளித்தவுடன் முடியை துவட்டும் போது அதீத கவனம் கொள்ள வேண்டும். தலையை அலசியவுடன் தண்ணீர் இழுக்கும் டவலை ஐத்து உங்கள் முடியை கட்ட வேண்டும். ஈரமான முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுக்க வேண்டாம். இதனால் அதிகமாக முடி கொட்டும். பெரிய பல் சீப்பை வைத்து சிக்கெடுப்பது சிறந்தது. முடிந்தால் ஹேர் ட்ரையரை வைத்து முடியை காய வைக்கலாம். 

மேலும் படிக்க | 1 மாதுளை பல பலன்கள்.. வியக்க வைக்கும் மாதுளை ஜூஸின் நன்மைகள்

4.இறுக்கமாக முடியை கட்ட வேண்டாம்:

முடியை தூக்கு போனி டெய்ல் எனும் குதிரை வால் சிகை அலங்காரம் போன்ற ஹேர் ஸ்டைல்களை செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். காரணம், நாம் இது போல இறுக்கமாக முடியை கட்டும் போது முடி உடைய வாய்ப்பு இருக்கிறது. நீளமான முடிக்கு உகந்த ஹேர் ஸ்டைல், எப்போதும் முடியை கிழ் நோக்கியவாறு கட்டி வைப்பதுதான். அப்போதுதான் முடி உடையாமலும் உதிராமலும் இருக்கும். 

5.முட்டை மாஸ்க்:

முட்டையில் கெரட்டின் அளவு அதிகமாக இருக்கும். இதுதான் முடியை வலுவாக்குகிறது. முட்டை ஹேர் மாஸ்க்கில் உள்ள ஈரப்பதம் தலைமுடியில் உள்ல வறட்சியை போக்க உதவும். இதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

>ஒரு கிண்ணத்தில், முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும், 

>நன்கு கலக்கிய பிறகு, அதில் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். 

>இந்த கலவையை ஈரமான முடியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே ஊர வைக வேண்டும். 

>பின்னர், முடியை சாதாரண நீரில் விருப்பத்திற்கேற்ற ஷாம்பூ போட்டு அலச வேண்டும். 

6.ஹெல்தி டயட்:

முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிரம்பிய உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாம்பழம், கீரை, அவகேடோ, ஆப்பிள் போன்ற பழங்களை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News