நீங்கள் வாங்கும் அரசி போலியானதா? கண்டுபிடிக்க 5 எளிய வழிகள்!

உணவுப் பொருட்களின் தரம் ஒவ்வொரு நாளும் கீழே சென்று கொண்டு உள்ளது.  மேலும் கலப்படப் பொருட்களில் பிளாஸ்டிக் அரிசியும் சேர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2023, 07:54 PM IST
  • பிளாஸ்டிக் அரிசியை உட்கொள்வது மிகவும் ஆரோக்கியமற்றது.
  • பிளாஸ்டிக் சிதைவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.
  • பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதே சிறந்தது.
நீங்கள் வாங்கும் அரசி போலியானதா? கண்டுபிடிக்க 5 எளிய வழிகள்! title=

இந்தியாவில் உணவில் கலப்படம் செய்து விற்கப்படுவது பல ஆண்டுகாலம் இருந்து வருகிறது.  மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரின் முக்கியமான உணவாக அரிசி இருந்து வருகிறது. இந்நிலையில், அரிசியில் கலப்படம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  நாளுக்கு நாள் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலி அரிசி விற்கப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இந்த விஷயங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்தும், உணவில் கலப்படம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் கொய்யா இலை: இப்படி சாப்பிடுங்கள்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடந்த ஆண்டு அரிசியில் மஞ்சள் கலப்படத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை பகிர்ந்தது.  ஒரு கைப்பிடி அரிசி எடுத்து, அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் சுண்ணாம்பு பிழிந்து சிறிது நேரம் கழித்து அரிசி சிவப்பு நிறமாக மாறினால் அது கலப்படம் செய்யப்பட்ட அரிசி என்று அர்த்தம்.  இந்திய சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி நுழைந்துவிட்டதாக இந்தியர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மளிகைக் கடைகளில் போலி சீன அரிசி விற்கப்படுவதாகவும், இதனால் மக்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், போலி பிளாஸ்டிக் அரிசியை உட்கொள்வதைத் தவிர்க்க, அரிசியின் தரத்தை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அரிசியை பார்ப்பதன் மூலம் உண்மையான அல்லது போலி பிளாஸ்டிக் அரிசி என்று சொல்வது கடினம் என்றாலும் சில வழிகளில் கண்டு பிடிக்கலாம்.

பிளாஸ்டிக் அரிசியை அடையாளம் காண ஐந்து குறிப்புகள்:

நீர் சோதனை:  உண்மையான அரிசியிலிருந்து பிளாஸ்டிக் அரிசியை அடையாளம் காண்பதற்கான எளிதான வழி, ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு சில அரிசியை எடுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும். அரிசி மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும், ஏனெனில் அரிசி தண்ணீரில் மிதக்காது. 

தீ சோதனை: பிளாஸ்டிக் எரியும் போது ஒரு விசித்திரமான வாசனை வரும். மேலும் இந்த எளிய முறையில் அரிசி உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய உதவும். ஒரு கைப்பிடி அரிசியில் நெருப்பு பற்ற வைத்து பார்க்கவும். அரிசியில் பிளாஸ்டிக் வாசனை வருகிறதா இல்லையா என்பதைக் கவனித்து தெரிந்து கொள்ளலாம்.

சூடான எண்ணெய் சோதனை: சிறிது அரிசியை எடுத்து சிறிது சூடான எண்ணெயில் விடவும். இந்த விஷயத்தில், பிளாஸ்டிக் அரிசி மூழ்கி கிண்ணத்தின் அடிப்பகுதிக்குச் செல்லும், அதே நேரத்தில் உண்மையான அரிசி மேலே மிதக்கும். இது தவிர, பிளாஸ்டிக் அரிசியும் உருகிய பிளாஸ்டிக்கில் இருந்து எண்ணெயின் மேல் அடுக்கை உருவாக்கும்.

பூஞ்சை சோதனை: அரிசி கொதித்ததும் சிறிது அளவு எடுத்து, பாட்டிலில் போட்டு இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே வைக்கவும்.  இதன் மூலம் போலி அரிசியை கண்டுபிடிக்கலாம். புழுங்கல் அரிசி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டால், அது அப்படியே இருக்கும், பூஞ்சை இருக்காது. இருப்பினும், உண்மையான அரிசியை அறை வெப்பநிலையில் இவ்வளவு நேரம் வெளியே வைத்திருந்தால் அதன் மீது பூஞ்சை உருவாகும்.

கொதிநிலை சோதனை: அரிசியை கொதிக்க வைக்கும் போது, ​​அதில் பிளாஸ்டிக் இருந்தால், பாத்திரத்தின் மேற்பகுதியில் தடிமனான அடுக்கை உருவாக்கத் தொடங்குகிறது.

மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News