ஏசியில் கூலிங் சரியா வரலையா? இத செய்ங்க!

கோடைகாலத்தில் ஏசியில் இருந்து சிறந்த குளிர்ச்சியைப் பெற சில வழிமுறைகள் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2022, 05:50 PM IST
  • தற்போது வெயில் அதிகமாக உள்ளது.
  • கிட்டத்தட்ட அனைவரது வீட்டிலும் ஏசி தற்போது உள்ளது.
  • சில சமயங்களில் ஏசியில் கூலிங் வருவதில்லை.
ஏசியில் கூலிங் சரியா வரலையா? இத செய்ங்க!  title=

கோடை காலம் வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே வரமுடியாது, வெயிலின் தாக்கம் வெகுவாக இருக்கும்.  ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை.  இந்த ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.  இந்த வெக்கையான நாட்களில் இருந்து விடுதலை தருவதாக அமைவது ஏசிக்கள் தான், இந்த நாட்களில் பலரும் ஏசி அறைகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.  இருப்பினும், ஏசிகள் சரியாக வேலை செய்ய, சில எளிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.  உங்கள் ஏசியில் இருந்து சிறந்த குளிர்ச்சியைப் பெற முக்கியமான மற்றும் எளிமையான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பயன்படுத்தி அதிகளவில் குளிர்ச்சியை பெறலாம்.

ac

மேலும் படிக்க | நம்மை எப்படி வியாபாரிகள் பொருட்களை வாங்க வைக்கிறார்கள்?

நவீன தொழில்நுட்பங்களுடன் ஏசிகள் பல குளிரூட்டும் மோட்களில் வருகின்றன. அதில் கூல், ட்ரை, ஹாட், ஃபேன் மற்றும் பல மோட்கள் உள்ளன.  சிறந்த குளிர்ச்சியை பெற 'கூல்' மோடில் ஏசி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.  ஏசி ஃபில்டர்கள் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  சிறந்த காற்றோட்டம் மற்றும் குளிர்ச்சியை பெற இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்.  அந்த ஃபில்டர்களில் உள்ள துவாரங்களில் தூசி அல்லது குப்பைகள் ஏதேனும் உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்து பார்ப்பதன் மூலம் சிறந்த காற்றை பெறலாம்.  அறையில் குளிர்ந்த காற்று நிலையாக இருக்க வேண்டுமெனில் ஏசி அறையை சரியாக மூடி வைப்பது அவசியம்.  அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சரியாக மூடப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  மேலும் கதவு மற்றும் ஜன்னல்களை அடிக்கடி திறப்பதையும் மூடுவதையும் தவிர்க்கவும்.

ac

உங்கள் அறை நேரடியாக சூரிய ஒளியில் படும்படியாக அமைந்திருந்தால், சிறப்பான குளிரை ஏசி வழங்குவது சற்று கடினமானது.  மேலும் சூரிய ஒளி நேரடியாக அறைக்குள் நுழைவதைத் தவிர்க்க ஜன்னல்களில் கார்டெய்ன்ஸ்களை கொண்டு மூடி வையுங்கள்.  உங்கள் ஏசியின் திறனை பொறுத்துதான் குளிரின் அளவும் அமையும், உங்கள் அறையின் அளவை விட ஏசி கொள்ளளவின் அளவு கம்மியாக இருந்தால் குளிரூட்டும் திறன் குறைவாக இருக்கும்.  100 சதுர அடி அளவு அறைக்கு 1-டன் அளவுள்ள ஏசி வேண்டும், 150 சதுர அடி  அளவு அறைக்கு 1.5-டன் ஏசியும் மற்றும் 200 சதுர அடி அளவு அறைக்கு 2-டன் ஏசியும் பொருத்தமானது.  மேலும் அறையில் அதிகமான அளவில் நபர்கள் இருந்தால் ஏசியில் இருந்து வரும் காற்றின் அளவு குறைவான அளவில் தான் இருக்கும்.

ஸ்பிலிட் ஏசிகளாக இருந்தால், அதன் மீது நேரடியாக சூரிய ஒளி விழுவது குளிர்ச்சியை பாதிக்கும்.  அதனால் அதனை நிழல் படும்படியான இடத்தில் பொருத்தி வைப்பது நல்லதாகும்.  ஏசி அருகில் காற்றோட்டத்தை பாதிக்கும் வகையிலான எந்தவித பொருளையும் வைத்துவிடக்கூடாது, எதிரே பொருள் இருந்தால் காற்று தடைப்படும்.  சிறந்த குளிரூட்டலுக்கு, ஏசி சரியான நேரத்தில் இயங்குவது முக்கியமானதாகும்.

மேலும் படிக்க | ATM-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News