குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதா? இளம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுதான்

Diarrhea children care tips : ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், என்ன உணவு கொடுக்க வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வயிற்றுப்போக்கின் போது ஒரு குழந்தையை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 03:22 PM IST
  • மழைக்காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப்போக்கு
  • குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள டிப்ஸ்
  • மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள்
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதா? இளம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுதான் title=

Remedies for child diarrhea, Lifestyle News Tamil : மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் வயிற்றுப்போக்கு பாதிப்பை எதிர்கொள்கின்றனர். பிஞ்சு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை திடீரென வயிற்றுப்போக்கு மருத்துவமனைக்கு செல்லும் நிலை, இப்போது நிலவும் சீதோஷண நிலை ஏற்படுத்திவிட்டது. எதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?, ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது? என்பதை பலரும் அறிந்துவைத்திருப்பதில்லை. குழந்தைகளுக்கு பொதுவாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்றால், அதிகப்படியான செயற்கை சர்க்கரை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, வயிறு கலங்கும். 

வைரஸ், வயிற்றுத் தொற்று, உணவு ஒவ்வாமை ஆகியவற்றாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மலம் தண்ணீராக மாறும். இது தவிர, மலம் வழக்கத்தை விட மோசமாக துர்நாற்றம் வீசும். மலத்தின் நிறம் மாறும். வயிற்றுப்போக்கு ஏற்படத்தொடங்கியதும் குழந்தைக்கு வயிற்றில் வலி தொடங்கும். மேலும், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பலவீனத்தை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | திருமண உறவில் பார்ட்னர் துரோகம் செய்கிறாரா... இந்த 5 அறிகுறிகள் காட்டிக்கொடுத்துவிடும்!

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ORS - வயிற்றுப்போக்கு, அடிக்கடி குடல் மோசமான இயக்கம் காரணமாக, குழந்தையின் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது அவர்களுக்கு உடன்னடியாக ஓஆர்எஸ் கொடுங்கள். ORS ஐ குடிப்பதன் மூலம், உடலில் நீரிழப்பால் ஏற்பட்ட பலவீனம் குறைந்துவிடும். குழந்தைகளுக்கான ORS என்று மெடிக்கலில் கேட்டாலே கொடுப்பார்கள். இது தவிர 6 டீஸ்பூன் சர்க்கரையுடன் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து வீட்டிலேயே கூட இந்த கரைசலை தயாரிக்கலாம். இந்த கரைசலை குழந்தைக்கு ஒவ்வொரு மணி நேரமும் சிறிதளவு குடிக்க கொடுத்துக்கொண்டே இருங்கள்.

வாழைப்பழம் - வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் அளிப்பதில் வாழைப்பழம் நல்ல தீர்வை கொடுக்கும். ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், வாழைப்பழத்தை சாப்பிட கொடுங்கள். வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்தும் கொடுக்கலாம். இது குழந்தைக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, மலத்தின் எடையை கூட்டி, தண்ணீர்போன்று செல்லும் மலப் பிரச்சனையை நீக்கும்.

மாதுளை சாறு – வயிற்றுப்போக்கின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க மாதுளை சாறும் குடிக்கலாம். மாதுளம்பழத்தை அரைத்து மஸ்லின் துணியில் வடிகட்டி, அதில் வரும் சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து குழந்தைக்குக் குடிக்கக் கொடுக்கவும்.

ஜூஸ்கள் - ORS மற்றும் மாதுளை சாறு தவிர, கேரட் சாறு, பழச்சாறு அல்லது தேங்காய் தண்ணீர் குழந்தைக்கு கொடுக்கலாம். குறிப்பாக வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு தேங்காய் தண்ணீர் சிறந்தது.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

1. வயிற்றுப்போக்கு போது, குழந்தை முழுமையான ஓய்வு தேவை. 

2. பசுவின் பால், பாலாடைக்கட்டி அல்லது வெண்ணெய் போன்றவற்றை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம்.

3. குழந்தைகளின் சுற்றுப்புறங்களை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. மருத்துவரின் ஆலோசனையின்றி குழந்தைக்கு எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம்.

மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News