ஆன்மீக சுற்றுலா செல்லும் விருப்பம் இருந்தால், உங்களுக்கான சரியான நேரம் இது. இந்தியன் ரயில்வே இப்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம்.
ஏசி மற்றும் ஸ்லீப்பர் என இரண்டு வகைகளில் பக்தர்கள் பயணம் செய்யலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியது. ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த ஆண்டு, அதாவது 18.02.2023 ஆம் தேதி தொடங்குகிறது. பயணிகள் இரவு தங்குவதற்கு/காலை ப்ரெஷ் ஆவதற்காக பட்ஜெட் ஹோட்டல் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க
புனித ராமாயண யாத்ராவில் செல்லும் இடங்கள்; அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 8 இரவு மற்றும் 9 பகல்களில் நீங்கள் இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
புனித ராமாயண யாத்ரா பயண கட்டணம்; ஸ்லீப்பர் கிளாஸ் - ரூ.15,770 (நபர் ஒன்றுக்கு), 3 ஏசி கம்பர்ட் - ரூ.18,575 (நபர் ஒன்றுக்கு)
ஐஆர்சிடிசி ஏற்பாடு
ரயில் மூலம் அழைத்துச் செல்லப்படும் பயணிகள், வாகனம் மூலம் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படும். மேலும், காபி, டீயும் பயணிகளுக்கு கொடுக்கப்படும்.
Dive deep into devotion and spirituality with the HOLY RAMAYANA YATRA EX ITWARI tour package from #IRCTC. Visit Ayodhya, Sitamarhi, Janakpur, Buxar, Prayagraj, Varanasi & Chitrakoot to experience the utmost pious vibe. Package starting at ₹15,770 onwards.https://t.co/o8ZhwUKK4j
— IRCTC (@IRCTCofficial) November 21, 2022
புனித ராமாயண யாத்ராவுக்கு புக் செய்வது எப்படி?
இந்த யாத்ராவுக்கு நீங்கள் புக் செய்ய விரும்பினால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று நீங்கள் புக் செய்யலாம்.
மேலும் படிக்க | இந்த 50 ரூபாய் நோட்து உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ