முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி: வெந்தய விதைகள் நம் சமையலறைக்கு பழக்கப்பட்ட பொருளாகும். இந்த தானியங்கள் நீண்ட காலமாக மசாலாப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இப்போதெல்லாம், இந்த தானங்களின் வெவ்வேறு பலன்கள் ஒவ்வொரு முறையில் கேட்கப்படுகின்றன. அந்த வகையில் வெந்தயத்தின் நன்மைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன் தருகிறது. வெந்தய விதைகளை வெவ்வேறு வழிகளில் தலைமுடியில் தடவலாம். ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், இரும்பு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வெந்தய விதைகள் (Fenugreek Seeds) முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்தலைத் தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும் பயன்படுகிறது. எனவே வெந்தயத்தை எந்தெந்த வழிகளில் தலைமுடியில் தடவலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தய விதைகளை முடியில் எவ்வாறு தடவுவது | How To Apply Fenugreek Seeds On Hair
தலைமுடியில் பொடுகை நீக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சிக்காகவும், முடி அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்க வெந்தய விதைகளைப் பயன்படுத்தலாம். வெந்தய விதைகள் உச்சந்தலையில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது. இந்த தானியங்களை முடியில் பல வழிகளில் தடவுவதன் மூலம் பலன்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | பற்களின் மஞ்சள் அடுக்கு நீங்கனுமா?, இந்த 4 வீட்டு வைத்தியம் மட்டும் போதும்
மெல்லிய கூந்தலுக்கு: வெந்தய விதைகளை மெல்லிய கூந்தலில் தடவ, இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை அரை கப் தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்கவிடவும். இதோ உங்களின் வெந்தய எண்ணெய் தயார். இந்த எண்ணெயை முடியின் வேர் முதல் நுனி வரை தடவலாம். இதனால் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் மாறும்.
முடி உதிர்வதை தடுக்க உதவும்: உங்கள் தலைமுடி தொடர்ந்து உதிரும் தொந்தரவு இருந்தால், இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், இந்த தானியங்களை அரைத்து பேஸ்ட் செய்யவும். இந்த வெந்தயத்தை கூந்தலில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்த பின் தலையை அலசவும். இந்த மருந்தை வாரத்தில் இரண்டு நாட்கள் முயற்சி செய்யலாம்.
உலர்ந்த கூந்தலுக்கு: வெந்தய விதைகளின் ஹேர் மாஸ்க் உலர்ந்த கூந்தலை மென்மையாக்கவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தயிர் எடுத்து வெந்தயத்தை அரைத்து சேர்க்கவும். தயிரில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி மட்டும் சேர்க்க வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவவும். முடி தொடுவதற்கு மென்மையாக இருக்கும்.
பொடுகு நீங்கும்: வெந்தய விதைகளை எலுமிச்சை சாறுடன் அரைத்து, 20 முதல் 25 நிமிடங்கள் முடியில் தடவி, பின்னர் தலைமுடியைக் கழுவவும். இந்த ஹேர் மாஸ்க் மூலம், பொடுகு மற்றும் பில்ட் அப் இரண்டும் உச்சந்தலையில் இருந்து அகற்றப்படும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அசிங்கமான மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ