தொற்றுநோய் பரவல் காலத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் திறமையாக கையாள்வது எப்படி..!!
இந்த தொற்றுநோய்களின் போது பெற்றோருக்குரிய போது அமைதியாக இருக்க, நீங்கள் சில உதவிக்குறிப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.
தற்போதைய தொற்றுநோய் நெருக்கடி காலத்தில், பெற்றோர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், மற்றும் குழந்தைகளின் படிப்பு மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் குழந்தைகளுடன் பங்கேற்பது என அஷ்டாவதானியாக மாற வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதனால், பெற்றோர்கள் மிகவும் களைத்துப்போவதில் ஆச்சரியமில்லை. இந்த சவாலான நேரத்தை சமாளிக்கும் போது மன அழுத்தம் ஏற்படுத்துவது இயற்கையான விஷயம் தான்.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
அலுவலக வேலை காரணமாக குழந்தைகளை முழுமையாக கவனிக்க முடியாத குற்ற உணர்வு மற்றும் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை போன்ற விஷயங்கள் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபத்தையும் வெளிப்படுத்தக் கூடும். ஆனால், இது உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்ல. இது சிக்கல்களை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது. இதனால், மனதை அமைதியாக வைத்திருந்து,அனைத்தையும் சிறப்பாக கையாள்வது தொடர்பான சில விஷயங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.
உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கும் தற்போதைய நேரம் கடினமான காலம் தான். கல்வி நிறுவனங்களை மூடிக்கிடக்கின்றன. அவர்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். நண்பர்களுடன் விளையாடுவதற்கு வெளியே செல்ல முடியாமல் இருப்பது உங்கள் குழந்தைகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளின் அழுத்தம் உள்ளது. எனவே, நேரத்தை எடுத்துக்கொண்டு அவர்களுடன் விளையாடுவது முக்கியம். இது உங்களுக்கு புட்த்ஹுணர்வு தரும். இது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
ALSO READ | பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!
அன்றைய நாளை திட்டமிட்டு, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்
வீட்டில் வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளையும் இவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும். உங்கள் குழந்தைகளும் இதனால், எதியும் திட்டமிட்டு சிறப்பாக செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வார்கள். மேலும், ஒரு நாளில், ஒரு முறையாவது, அனைவரும் ஒன்றாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். டிவி, மொபைல் போன்றவற்றிலிருந்து விலகி, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுங்கள், அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.
ஒரு சூப்பர் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள்
இணையத்தளத்தில், பிறர் கூறும் அனைத்தையும், செய்யவோ அல்லது கடைபிடிக்கவோ முயற்சிக்காதீர்கள். உங்களால் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமாக குழந்தைகளை வளர்ப்பார்கள். எனவே உங்களுக்காக வேலை செய்யும் வழிகளைத் தேடுங்கள்.