Nita Ambani Lifestyle News Tamil : உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதி இப்போது தான் ரிலாக்ஸ் ஆகி இருக்கின்றனர். இந்த நேரத்தில் வாழ்க்கை துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீதா அம்பானி தெரிவித்திருக்கிறார். "இளம் வயதினர் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, வாழ்க்கை துணையை சரியாக தேர்ந்தெடுப்பது தான். இதை தான் என் மகன்களுக்கும் அடிக்கடி சொல்லுவேன். நான் முகேஷ் அம்பானியை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ததற்கு பெருமைப்படுகிறேன். முகேஷ் அம்பானி எனக்கு கிடைத்தது மிகவும் பாக்கியமாக உணர்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகாது, இந்த தவறை செய்யாதீங்க..
வாழ்க்கை துணையை சரியாக செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மனநல மருத்துவர் டாக்டர் சோனல் ஆனந்த் விளக்கியுள்ளார். அவர் பேசும்போது," உங்களின் இந்த முடிவு தான் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையை பொறுத்து தீர்மானமாகும். அதனால், உங்களுடன் எப்போது, எந்நேரத்திலும் கூடவே இருப்பவர்களை தான் வாழ்க்கை துணையாக தேர்வு செய்ய வேண்டும். ஏற்றத்தாழ்வுகளில் அவர்கள் உடனிருப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படியான நபர் உங்கள் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அந்த வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பொக்கிஷமாக உணர்வீர்கள்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மனநல மருத்துவர் சோனல் ஆனந்த் " உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி, தொழில், வாழ்க்கைத் தரம், குடும்பம், நிதி நிலைமை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என எல்லா அம்சங்களையும் பாதிக்கக்கூடிய முடிவு, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அவசரம் காட்டாதீர்கள். பொறுமையாக, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது." என தெரிவித்துள்ளார்.
நல்ல பார்ட்னரை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவரே கூறியிருக்கிறார். " உங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்போது, அவரின் எதிர்பார்ப்புகள் என்ன?, அவர்/அவள் உங்களுக்கான இலக்குகளுக்கு ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?, அவரிடம் உங்களின் அனுகுமுறை, அவர் உங்கள் மீது காட்டும் அணுகுமுறை எல்லாம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியதாகவும், மனநிறைவாக இருக்கும் என கருதிகிறீர்களா? என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். உங்களின் முழு நம்பிக்கையின் உருவமாக அவர் இருப்பாரா? என்ற காரணிகளை அலச வேண்டும். இதுதவிர உங்களின் குடும்பச் சூழல் பற்றி என்ன நினைக்கிறார்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது சாலச் சிறந்தது" என்கிறார் மனநல மருத்துவர் சோனல் ஆனந்த்.
மேலும் படிக்க | ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ