Credit Card: கிரெடிட் கார்டு தொடர்பான இந்த பழக்கத்தை தவிர்த்தால்.. சிபில் ஸ்கோர் கட்டாயம் உயரும்

Credit Card Tips: கிரெடிட் கார்டு தொடர்பான பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு பெரிதும் மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 22, 2024, 07:32 PM IST
Credit Card: கிரெடிட் கார்டு தொடர்பான இந்த பழக்கத்தை தவிர்த்தால்.. சிபில் ஸ்கோர் கட்டாயம் உயரும் title=

Credit Card News In Tamil: கடன் அட்டைகள்: நாம் ஏன் கடன் அட்டைகளைப் (Credit Card) பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி நமக்குள் எழுந்துக்கொண்டே இருக்க வேண்டும். பணம் இல்லாத நேரத்தில் அவசரத் தேவைக்கு, தள்ளுபடி மற்றும் சாளுமை, மாதாந்திர தவணைகள் (EMIs) மூலம் சில விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது, வட்டி இல்லாமல் பில்களை செலுத்துவதற்கான வசதி போன்ற காரணங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம். சுருக்கமாகச் சொன்னால், அதை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதான் கிரெடிட் கார்டில் பணம் இருக்கிறதே என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு, மனம் போன போக்கில் தவறாமல் பயன்படுத்தத் தொடங்கினால், கிரெடிட் கார்டு நம் வாழ்க்கையை கடினமாக்கி விடும்.

இந்தக் கட்டுரையில், கடன் வலையில் சிக்காமல் இருக்கவும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தவும் கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் அறிந்துக்கொள்ளுவோம்.

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

முதலில் நீங்கள் கிரெடிட் கார்டை வாங்க நினைத்தால், அதற்கான தேவைகள் மற்றும் அதை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதைப் பற்றி நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் அவசர காலங்களில் இதைப் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் அதிக பணம் செலுத்தி வாங்க முடியாத பொருட்களை வாங்கவும் அல்லது தள்ளுபடியைப் பயன்படுத்தி குறைந்த சலுகை விலையில் வாங்கலாம்.

குறைந்த அளவு கடன் வழங்கும் கிரெடிட் கார்டு உங்களுக்கு போதுமானது என்று நீங்கள் நினைத்தால், அதிக கடன்கள் வழங்கும் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். அதேபோல ஒரு கடன் அட்டை போதுமானது என்று நீங்கள் நினைத்தால், இரண்டாவது கடன் அட்டைக்கு செல்ல வேண்டாம்.

பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் பழக்கம், உங்களுக்கு கடனை உண்டாக்கக்கூடிய ஷாப்பிங் செய்ய உங்களைத் தூண்டலாம். 

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது, நீங்கள் சரியான நேரத்தில் அந்த கடனை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - Credit Card Rules: கிரெடிட் கார்ட் விதிகளை மாற்றிய தனியார் வங்கிகள்!

ஒவ்வொரு கடன் அட்டைக்கும் ஒரு வரம்பு உண்டு

உங்கள் மொத்தக் கிரெடிட்டில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட்டின் அளவு கடன் பயன்பாட்டு விகிதம் (CUR) அல்லது கடன் பயன்பாட்டு வரம்பு என அறியப்படுகிறது.

உங்கள் கிரெடிட் கார்டில் 100 சதவீத வரம்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், பெரும்பாலான கிரெடிட் கார்டு ஏஜென்சிகள் அதிக சிபில் ஸ்கோருக்கு உங்கள் மொத்த வரம்பில் 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கின்றன.

உதாரணமாக உங்களிடம் தலா ரூ.1 லட்சம் வரம்புடன் இரண்டு கிரெடிட் கார்டுகள் இருந்தால், ஒரு சுழற்சியில் உங்கள் மொத்த கடன் வரம்பு ரூ.2 லட்சமாக இருக்கும்.

ஒரு நல்ல சிபில் ஸ்கோர் வேண்டும் என்றால், நீங்கள் ரூ.60,000 (உங்கள் கடன் வரம்பில் 30 சதவீதம்) அதிகமாகச் செலவிடக்கூடாது.

சலுகை என்பதால் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்

சில நேரங்களில், ஒரு கிரெடிட் கார்டை வாங்குகிறோம். அந்த கிரெடிட் கார்டு மூலம் அது ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு அல்லது தயாரிப்புக்கு தள்ளுபடியை வழங்குகிறது. ஆனால் அதனுடன் சேர்ந்து பல தேவையற்ற பொருட்களை வாங்குகிறோம். அதன் மூலம் பெரிய கடனுக்கு வாங்கி குவிக்கிறோம். அந்த கடனை மீண்டும் செலுத்தும் போது, இதை தேவையில்லாமல் வாங்கி விட்டோம் என நீங்கள் வருத்தப்படலாம். எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்.

மேலும் படிக்க - செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான்

கிரெடிட் கார்டு இலவசம் இல்லை. 

அதே நேரத்தில், பெரும்பாலான அட்டைகள் வாழ்நாள் முழுவதும் இலவசம் இல்லை. நீங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கு வருடாந்திர பராமரிப்பு பில் செலுத்த வேண்டும். எனவே, ஒரு குறிப்பிட்ட சலுகைக்காக மட்டுமே கார்டை வாங்குவது பெரும்பாலான நேரங்களில் சரியான முடிவாக இருக்காது.

கடன் அட்டையை திடீரென மூட வேண்டாம்

சில நேரங்களில், உங்களிடம் இருக்கும் சில கிரெடிட் கார்டுகளில் ஏதாவது ஒன்றை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் வைத்திருப்பீர்கள். திடீரென அந்த கிரெடிட் கார்டை திரும்ப செலுத்தி விடுவீர்கள். இது உங்கள் சிபில் ஸ்கோரை சேதப்படுத்தும் ஒரு மோசமான நடைமுறை ஆகும். எனவே கிரெடிட் கார்டு வாங்குவம்வாங்கும் முன் கவனம் மிக முக்கியம். 

மேலும் படிக்க - கிரெடிட் கார்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

ஏடிஎம் மூலம்  பணம் எடுப்பதைத் தவிர்க்கவும்

கிரெடிட் கார்டு பயன்படுத்தி குறிப்பிட்ட அளவில் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம் என்ற வசதி மூலம் நீங்கள் பணத்தை எடுப்பது உங்கள் சிபில் ஸ்கோரையும் பாதிக்கலாம்.

தானியங்கு டெல்லர் மெஷினில் (ATM) பணம் எடுப்பது உங்கள் நிதி நிலைமை சரியில்லை என்பதற்கான சமிக்ஞையை கடனளிப்பவருக்கு வழங்குகிறது. இது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கிறது.

இரண்டாவதாக, ஏடிஎம் மூலம் பணத்தை பெறுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் பணத்தை எடுத்த நாளிலிருந்து வட்டிக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. இது மாதத்திற்கு 4% ஆக கூட இருக்கலாம். அந்தந்த நிறுவனத்தை பொறுத்து இருக்கும். அதே சமயம், ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு ரிவார்டு புள்ளிகள் எதுவும் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா... கடன் வலையில் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News