சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கனவு. வீடு வாங்குவது அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்றாகும். மக்கள் இதற்காக பல ஆண்டுகளாக பணம் சேர்த்து, தங்கள் கனவு வீட்டை வாங்குகிறார்கள். வீடு வாங்குவது குறிப்பாக முதல் வீட்டை வாங்குவது ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வு. வாடகை வீட்டை அடிக்கடி மாற்றுவது, மாதந்தோறும் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வாடகையாகச் செலுத்துவது போன்ற தொல்லைகள் மற்றும் சில மனக் காரணிகள் மக்களை வீடு வாங்கத் தூண்டுகின்றன.
இருப்பினும், உணர்ச்சிகரமான ஒரு விஷயமாக இருந்தாலும், இது நிதி ரீதியாக மிக முக்கியமான முடிவாக கருதப்படுகின்றது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வீடு வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இதற்கு, முதலில், உங்கள் நிதிநிலை தயாராக உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஒரு வீட்டை வாங்குவதற்கு ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதற்காக வீட்டுக் கடன் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். வீட்டுக் கடன் ஒரு நீண்ட கால கடனாகும். நீண்ட நிதி பொறுப்பை ஏற்க நீங்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நீங்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது மிக அவசியமாகும். இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் உங்கள் நிதி நிலையை இதற்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘அப்ரைசல்’ ! சம்பள அதிகரிப்பை உறுதிப்படுத்தும் TCS
பர்சனல் ஃபைனான்ஸின் இந்த விதியை மனதில் கொள்ளுங்கள்
50:30:20 என்பது பர்சனல் ஃபைனான்ஸின் அடிப்படை விதியாகும். அதாவது உங்கள் சம்பளத்தில் 50% அத்தியாவசிய பொருட்களுக்கு செலவிட வேண்டும். பயன்பாட்டு பில்கள், வாடகை, EMI, மளிகை பொருட்கள் வாங்குதல் போன்றவை இதில் அடங்கும். இதற்குப் பிறகு, சம்பளத்தில் 20 சதவீதத்தை எங்காவது முதலீடு செய்ய வேண்டும். இப்போது எஞ்சியிருக்கும் 30 சதவீதத்தை மற்ற கூடுதல் செலவுகளுக்கு வைத்திருங்கள். எந்தவொரு கடனையும் வாங்கும்போது, உங்கள் மொத்த இஎம்ஐ உங்கள் சம்பளத்தில் 30% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் பின்னர் வருந்த வேண்டியிருக்கும்.
இந்த உதாரணத்தின் மூலம் கணிதத்தை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் டேக் ஹோம் சம்பளம் ரூ.1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இதில், 50 ஆயிரம் ரூபாயை தேவையான செலவுகளுக்கு வைத்துக் கொள்வீர்கள். இந்த 50 ஆயிரம் ரூபாயில் வீட்டின் இஎம்ஐயையும் செலுத்த வேண்டும். உங்களின் சம்பளம் ரூ.1 லட்சம் என்பதால், இதன்படி உங்களின் மொத்த இஎம்ஐ ரூ.30 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 20 ஆயிரம் ரூபாயை எங்காவது முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 30 ஆயிரம் ரூபாய் மற்ற செலவுகளுக்கு வைக்கப்படும். இப்போது நீங்கள் சுமார் ரூ.30 ஆயிரம் இஎம்ஐ செலுத்த முடியும் என்றால், உங்கள் வீட்டுக் கடன் 20 ஆண்டுகளுக்கு ரூ.35 லட்சத்துக்கும், 25 ஆண்டுகளுக்கு ரூ.38 லட்சத்துக்கும், 30 ஆண்டுகளுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது.
கீழே உள்ள கணக்கீடு மூலம் அதைப் புரிந்து கொள்ளுங்கள்:
வீடு வாங்கும்போது வரும் பிற செலவுகள்
பொதுவாக, வங்கிகள் வீட்டுக் கடனாக வீட்டின் விலையில் 80 முதல் 90 சதவீதம் வரை வழங்குகின்றன. மீதமுள்ள தொகையை கடன் வாங்கும் நபரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்கினால், டவுண் பேமெண்டாக ரூ.10 லட்சம் உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் வருமானத்தின் படி, 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால் சரியாக இருக்கும். இதை விட அதிகமாக கடன் வாங்கினால் உங்கள் இஎம்ஐ அதிகரித்து மற்ற செலவுகள் குறையும்.
நீங்கள் எவ்வளவு டவுன் பேமெண்ட் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவாக உங்கள் கடனின் இஎம்ஐ இருக்கும். மற்றொரு விஷயத்தையும் நீங்கள் கவனிப்பது முக்கியம். ஒரு வீட்டை வாங்குவதற்கு ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவுக் கட்டணம் போன்ற பிற செலவுகள் உள்ளன. இதற்காக தனிப்பட்ட கடன் (பர்சனல் லோன்) வாங்குவதை தவிர்க்கவும்.
கடைசியாக மிக முக்கியமான விஷயம். கடன் வாங்கும்போது, ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியாகக் கணக்கிடாமல் கடனைப் பெறுவது அதிக இஎம்ஐ சுமைக்கு வழிவகுக்கும். இஎம்ஐ சுமை அதிகரித்தால், அதன் காரணமாக நீங்கள் பிற தேவையான செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். இது உங்களுக்குப் பிற்காலத்தில் மனச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ