குஜராத்தைச் சேர்ந்த தாக்கூர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில், திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.
குஜராத்தில் பெரும்பான்மை இனமாக கருதப்படும் தாக்கூர் இன மக்கள் அவ்வப்போது அதிரடி சட்டங்களை, தம் இன மக்களுக்கு விதிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தாக்கூர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் தங்கள் சமூக இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.
தற்போதைய காலத்தில், குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் செல்போன்களை மிக அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், திருமணமாகா இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று கூறினால்?...
சமூகத்தில் நடைபெறும் பெரும்பான்மை குற்றத்திற்கு முக்கிய காரணம் செல்போனாக கருதப்படும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையினை குறிப்பிட்ட இந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.
குஜராத்தின் வடக்கு மாவட்டங்களில் ஒன்றான பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அச்சமூகத்தினர், சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தியப்போது, திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் குடும்பத்தினருக்கு சுமார் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடியாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.